பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்433

இருபத்தோராவது

நீர்வர மடைந்த படலம்

     திருமகனைப் போர்த்திய துணியைத் தாய் ஒரு தடாகத்தில்
தோய்க்கவே, அதன் நீர் பிணி தீர்க்கும் வரம் பெற்றதைக் குறிக்கும் பகுதி.

                      மோயிசன் பிறப்பு

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                     1
கார்முகத் தகன்ற திங்கள் கதிர்செய்போ றோன்றல் தோன்றப்
போர்முகத் தளிக ளார்க்கும் பொழிலகன் றிருவர் போகிற்
பார்முகத் திருக ணொத்தார் படர்வழி கடந்த பின்னர்
நீர்முகத் தரும்பொன் சிந்து நெடும்புன லெதிர்கொண் டுற்றார்.
 
கார் முகத்து அகன்ற திங்கள் கதிர் செய் போல் தோன்றல் தோன்ற,
போர் முகத்து அளிகள் ஆர்க்கும் பொழில் அகன்று, இருவர்,
                                            போகில்,
பார் முகத்து இரு கண் ஒத்தார், படர் வழி கடந்த பின்னர்,
நீர் முகத்து அரும் பொன் சிந்து நெடும் புனல் எதிர் கொண்டு,
                                            உற்றார்.

     கரு மேகத்தை விட்டகன்ற திங்கள் கதிரொளி பரப்புதல் போல்
திருமகன் தோன்ற, நிலமகள் தன் முகத்திற் கொண்ட இரு கண்களை
ஒத்த சூசையும் மரியாளுமாகிய அவ்விருவரும், போரிடுதல் போல்
வண்டுகள் ஆரவாரிக்கும் சோலையைக் கடந்து போகையில், நெடுந்தூர
வழி கடந்து சென்ற பின்னர், நீர் ஓடுங்கால் அரிய பொன்னைக் கரையிலே
கொழிக்கும் ஒரு நெடிய ஆற்றை எதிர்கொண்டு, அதன் அருகே சென்றனர்.

                       2
பொய்செலச் செல்லும் வாயிற் பொலிவொடு பெருகும்போல
கை செலச் செல்லும் வாரி மருளிவந் தளவிற் பொங்கி
மெய்செலச் செல்லு நன்றொத் தெக்கணும் விளைவுய்த் தோடிப்
பைசெலச் செல்லு நாகப் பரிசெனச் செல்லு மாறே.