4 |
நூனெறி வழுவா
யூதர் நொந்தெசித் துறைந்த காலை
கோனெறி வளைத்த கோனக் குலத்தினைப்
பகைத்த தன்மை
சூனெறி பிறந்த மாந்தர்த் துணிக்குமி னென்று தந்தாய்
பானெறி யுயிருண் ணாமுன் பகைநெறி சிந்து வாரால் |
|
"நூல் நெறி வழுவா
யூதர் நொந்து எசித்து உறைந்த காலை,
கோல் நெறி வளைத்த கோன் அக் குலத்தினைப்
பகைத்த தன்மை,
'சூல் நெறி பிறந்த மாந்தர்த் துணிக்குமின்!' என்று, தம் தாய்
பால் நெறி உயிர் உண்ணா முன், பகை நெறி சிந்துவார் ஆல். |
"வேத நூல் நெறி
தவறாத யூதர் அடிமைப் பணியினால் நொந்து
எசித்து நாட்டில் வாழ்ந்த காலத்து, செங்கோல் நெறியை வளைவித்த
பாரவோன் மன்னன் அக்குலத்தையே பகைத்த தன்மையாக,
'கருப்பமுறையாற் பிறந்த ஆண் மக்களையெல்லாம் வெட்டிக்
கொல்லுங்கள்!' என்று கட்டளை பிறப்பிக்க, அக் குழந்தைகள் தம்
தாயின் பால் வழியாக உயிரை உண்டு வாழத் தொடங்கு முன்னரே,
பகைவீரர் அந்நெறிப்படி அவ்வுயிரைச் சிதைத்து அழிப்பாராயினர்.
'மக்கள்' எனப்
பொருள்படும் 'மாந்தர்' என்ற பன்மை, இங்குச்
சிறப்பாக ஆண் மக்களைக் குறித்து நின்ற ஒன்றொழி பொதுச்சொல்.
இது முதல் தொடர்ந்து வரும் மோயிசன் செய்தி, ப. ஏ., யாத்திராகமம்,
1: 6-22; 2: 1-10 காண்க.
5 |
காவினுட்
கொடியின் பூவோ கமலமே லன்னப் பார்ப்போ
பூவினுட் டிரண்ட தேனோ பொன்வலம் புரியுண் முத்தோ
வாவியுட் பதும மொட்டோ வானுலாங் கோளி னொன்றோ
கூவினுட் டனிநீர்த் தன்றக் குலத்திலோர் குழவி
வேய்ந்தான். |
|
"காவினுள் கொடியின்
பூவோ, கமல மேல் அன்னப் பார்ப்போ,
பூவினுள் திரண்ட தேனோ, பொன் வலம்புரியுள் முத்தோ,
வாவியுள் பதும மொட்டோ, வான் உலாம் கோளின் ஒன்றோ,
கூவினுள் தனி நீர்த்து, அன்று அக்குலத்தின் ஓர் குழவி
வேய்ந்தான். |
|