பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்436

     "சோலையினுள் கொடியில் பூத்த பூவோ, தாமரை மலர் மேல்
அன்னக் குஞ்சோ, பூவினுள் திரண்ட தேனோ, பொன் மயமான வலம்புரிச்
சங்கினுள் அமைந்த முத்தோ, தடாகத்தினுள் தாமரை மொட்டோ,
வானத்தில் உலாவும் மீன்களுள் ஒன்றோ என்றெல்லாம் கருதுமாறும்,
பூவுலகில் ஒரு தனித் தன்மையோடும், அக்காலத்தில், அவ் யூத குலத்தில்
ஒரு குழந்தை தோன்றினான்.


                   6
அங்கதிர் மணியின் சாய லத்திரு மகனை நோக்கி
வெங்கதிர் வேலி னார்தாம் வெட்டவும் விடவுந் தேற்றா
செங்கதிர் திரைமூழ் கன்ன செய்தமஞ் சிகத்துட் பெய்தே
யிங்கதிர் புனற்க ணுய்கென் றிரங்கிவிட் டேகி னாரால்.
 
"அம் கதிர் மணியின் சாயல் அத் திரு மகனை, நோக்கி,
வெம் கதிர் வேலினார், தாம் வெட்டவும் விடவும் தேற்றா,
செம் கதிர் திரை மூழ்கு அன்ன, செய்த மஞ்சிகத்துள், பெய்தே,
'இங்கு அதிர் புனற்கண் உய்க!' என்று, இரங்கி, விட்டு
                                        ஏகினார் ஆல்.

     "அழகிய கதிர் வீசும் சாயல் கொண்ட அத்திரு மகனை,
வெம்மையான கதிர் வீசும் வேலைத் தாங்கிய ஏவலர் நோக்கி, தாமே
அவனை வெட்டிக் கொல்லவும் உயிரோடு விட்டு வைக்கவும்
துணியமாட்டாமல் இரங்கி, தாமே செய்த ஒரு பேழையினுள், செங்கதிர்
கொண்ட கதிரோன் கடலுள் மூழ்குவது போல் இட்டுவைத்து, 'இங்கு
ஒலித்து ஓடும் ஆற்றில் பிழைத்துப் போவானாக!' என்று விட்டுச்
சென்றனர்.

     'உய்க' என்றது 'உய்யின் உய்க' என்னும் கருத்துக் கொண்டது.
'ஆல்' அசை நிலை. 'உய்கவென்று' என வர வேண்டியது 'உய்கென்று'
என வந்தது தொகுத்தல் விகாரம்.

                    7
தாளெழுங் கமல நீரிற் றளம்பிய தென்றோ முத்தம்
பீளெழுஞ் சங்க மென்றோ பேழைமே லலைந்து போகிற்
றூளெழும் புரத்தின் கண்ணே தூரெழு நாணல் மாட்டி
வாளெழுங் கணினா ளீன்ற வண்ணநற் குழவி நின்றான்.