"'இப் பாலனுக்கென்று
பால் வளமுள்ள முலை கொண்ட ஒரு
தாதியை அழைத்து வாருங்கள்' என்று தோழியர்க்குச் சொல்லி, அவள்
தன் நல்ல மாளிகையை அடைந்தாள். தோழிப் பெண்டிர் அம் மகனை
மணம் கமழும் நீரால் குளிப்பாட்டி, அவன் அழகு மேலும் மிகுமாறு
பொன் மோதிரமும் சிலம்பும் சதங்கையும் பூட்டினர். அப்பொழுது அவன்
விண்மீன்களை நலமாக அணிந்த இள நிலாப் போலத் தோன்றினான்.
'சேய்' என்பது,
எதுகை இன்னோசைப் பொருட்டு, 'சே' என நின்றது.
11 |
தாயென வுணரா
தாயைத் தனயனை வளர்க்கக் கூட்டிச்
சேயென விமிழிற் கண்டாள் செறிந்துதன் னுளத்திற் றைத்த
நோயென லறுத்தொன் றென்னா நுனித்தவன் பியல்பிற் பன்னாள்
தூயின மணியின் சாயற் றோன்றலை வளர்த்திட் டாளே. |
|
"தாய் என உணரா,
தாயை, தனயனை வளர்க்கக் கூட்டி,
சேய் என இமிழின் கண்டாள்; செறிந்து தன் உளத்தில் தைத்த
நோய் எனல் அறுத்து, ஒன்று என்னா, நுனித்த அன்பு இயல்பின், பல்
நாள்
தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டாளே. |
"அத் தோழியர்,
அம்மகனின் தாயையே, அவன் தாயென்று அறிந்து
கொள்ளாமல், அவனை வளர்க்கக் கூட்டி வந்தனர். அத்தாய் அவன் தன்
மகனே என்பதை இன்பத்தோடு கண்டாள்; நெருங்கித் தன் உள்ளத்தில்
தைத்த துன்பம் என்பதை அறவே ஒழித்து, அதுபற்றி ஒன்றும் சொல்லிக்
கொள்ளாமல், மிகுந்த அன்பின் இயல்பால், தூய மணியின் சாயல் கொண்ட
அம் மகனைப் பல நாள் வளர்த்தாள்.
12 |
வளர்ந்தவெண்
மதியொத் தன்னான் வளர்ந்துமோ யிசனென் றோதித்
தளர்ந்ததன் குலத்தை யோம்பத் தற்பரன் பணிப்ப வங்க
ணுளர்ந்தபன் முயற்சி யாவு மொழுங்கினீ ருணர்தீ ரன்றே
கிளர்ந்தநல் வறிவி னோர்க்குக் கிளர்க்கநா னுரைப்ப தென்னோ. |
|