என்னும்
- என்பர்: 'செய்யும்' என்னும் முற்று பலர்பாலுக்கு வந்தது
முனிவர் கொண்ட புது மரபு.
பிணி
தீர்க்கும் சுனை நீர்:
- மா, கூவிளங்காய்,
கூவிளம், தேமா
14 |
மின்சொ
ரிந்தமுடி வேய்ந்தொளிர் தாயுந்
தேன்சொ ரிந்தகொடி யந்திற லோனு
நான்சொ ரிந்தநவை தீர்மக வேந்திக்
கான்சொ ரிந்தசுனை கண்டரு குற்றார். |
|
மீன் சொரிந்த
முடி வேய்ந்து ஒளிர் தாயும்,
தேன் சொரிந்த கொடி அம் திறலோனும்,
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்தி,
கான் சொரிந்த சுனை கண்டு, அருகு உற்றார். |
விண்மீன்களைச்
சொரிந்து அமைத்த முடியை அணிந்து ஒளிரும்
தாயாகிய மரியாளும், தேனைச் சொரிந்த மலர்க்கொடி ஏந்திய அழகிய
வரங்களின் ஆற்றல் கொண்ட சூசையும், நான் செய்த பாவங்களைத்
தீர்க்க அவதரித்து வந்த குழந்தை நாதனை ஏந்தியெடுத்துக் கொண்டு,
வழியில் மணம் பொழிந்த ஒரு மலர்த் தடாகத்தைக் கண்டு, அதன்
அருகே சென்றனர்.
'நான்' என்றது,
'என்னைப் போன்ற மனிதர்' என்ற பொருளில்
நின்றது.
15 |
மக்க டங்குவடு
நீத்தவர் வைகிச்
சொக்க டங்குசுத னைத்துதி பாட
மிக்க டங்குகுயில் பாடலின் விள்ளி
யிக்க டங்குமல ரின்புறல் கண்டார். |
|
மக்கள் தங்கு
வடு நீத்தவர் வைகி,
சொக்கு அடங்கு சுதனைத் துதி பாட,
மிக்கு அடங்கு குயில் பாடலின், விள்ளி
இக்கு அடங்கு மலர் இன்பு உறல் கண்டார். |
|