மக்களிடம்
பொருந்திய பாவங்களைத் தீர்க்கும் அம்மூவரும் அதன்
கரையில் தங்கினர். அப்பொழுது, அழகெல்லாம் ஒருங்கே பொருந்திய
திருமகனைத் துதி பாடுவனவாக, தொகையால் மிகுந்து அடக்கங்கொண்ட
குயில்கள் பாடுதலினால், தேன் உள்ளடங்கக் கொண்ட மலர்கள் விரிந்து
இன்புறுதலைத் தாம் கண்டனர்.
16 |
கரைகி டந்தவிவர்
காட்டரு ளன்ன
நிரைகி டந்தநிழ னீண்டரு வெல்லாம்
விரைகி டந்தமலர் விள்ளிய காலை
நுரைகி டந்தனகள் நுண்மண லார்ந்தே. |
|
கரை கிடந்த
இவர் காட்டு அருள் அன்ன,
நிரை கிடந்த நிழல் நீண் தரு எல்லாம்
விரை கிடந்த மலர் விள்ளிய காலை,
நுரை கிடந்தன கள் நுண் மணல் ஆர்ந்தே. |
கரைமேல் இருந்த
இம்மூவர் நமக்குக் காட்டும் அருள் போல,
அங்கு வரிசையாய் நின்ற நிழல் கொண்ட நெடிய மரங்களெல்லாம்
மணம் பொருந்திய தம் மலர்களை விரித்த போது, அவற்றின் தேன்
துளிகள் நுண்ணிய மணல் மீது நுரை நுரையாய்க் கிடந்தன.
17 |
கோளை யுண்டகுழல்
மென்கொடி யீன்ற
காளை யுண்டவத னக்கவின் காண
வாளை யுண்டசுனை வாவிம லர்ந்தே
தாளை யுண்ட மலர் தன்விழி யாமால். |
|
கோளை உண்ட
குழல் மென் கொடி ஈன்ற
காளை உண்ட வதனக் கவின் காண,
வாளை உண்ட சுனை வாவி மலர்ந்தே,
தாளை உண்ட மலர் தன் விழி ஆம் ஆல் |
விண்மீன்களை
அணிந்த கூந்தலையுடைய மெல்லிய கொடி போன்ற
மரியாள் பெற்ற காளையாகிய குழந்தைநாதன் கொண்டிருந்த முகத்தின்
அழகைக் காணும் பொருட்டு, வாளை மீன்களைக் கொண்ட ஊற்று நீருள்ள
தடாகம் மலர்ந்து, தண்டைக் கொண்டுள்ள கருங்குவளை மலர்களைத் தன்
கண்களாகக்கொண்டு நோக்கும்.
|