பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்443

     'ஆல்' அசை நிலை. 'மலர்ந்து' என்றபோது, தாமரை செவ்வாம்பல்
கருங்குவளை போன்ற எல்லா மலர்களையும் கொள்க; 'விழி' என்றவிடத்து,
கருங்குவளை ஒன்றே கொள்க. 'குழல்' என்றது சினையாகு பெயராய்த்
தலையைக் குறிக்கும்.

              18
சொற்க லத்திலுயர் வோர்சுவை மாந்தப்
பொற்க லத்திலமு தேபொழி வார்போல்
விற்க லத்திலொளிர் பூவிரி தாது
தற்க லத்தினிறை தந்தன தேனே.
 
சொல் கலத்தில் உயர்வோர் சுவை மாந்த,
பொன் கலத்தில் அமுதே பொழிவார் போல்,
வில் கலத்தில் ஒளிர் பூ, விரி தாது
தன் கலத்தில் நிறை தந்தன தேனே.

     சொல் என்னும் அணிகலத்தில் அடங்காது உயர்ந்த அம் மூவரும்
சுவையோடு அருந்துமாறு, பொற்கலத்தில் அமுதைப் பொழிந்து
தருவார்போல், வில்லொளி பரப்பும் அணிகள் போல் ஒளிரும் பூக்கள்,
விரித்த தம் இதழ்களாகிய கலங்களில் தேனை நிறைவாக ஏந்தித் தந்தன.

     'தந்தன' என்ற பன்மைக்கேற்ப, 'தம்' என வரவேண்டிய விரவுப்
பெயர், எதுகைப் பொருட்டு, 'தன்' எனத் திரிந்து நின்றது.

             19
நான்க லந்தநவை தீரரு ணல்லோர்
கான்க லந்தகனி கட்கனி வுண்டு
வான்க லந்தவுடு மான்மலர் கான்ற
தேன்க லந்ததெளி தீங்கய முண்டார்.
 
நான் கலந்த நவை தீர் அருள் நல்லோர்,
கான் கலந்த கனிகள் கனிவு உண்டு,
வான் கலந்த உடு மான் மலர் கான்ற
தேன் கலந்த தெளி தீம் கயம் உண்டார்.