பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்444

     நான் பொருந்தக் கொண்ட பாவங்களைத் தீர்க்க வந்த அருள்
கொண்ட அந்நல்லோர், மணம் பொருந்திய கனிகளைக் கனிவோடு உண்டு,
வானத்திற் பொருந்திய மீன்கள் போன்ற மலர்கள் பொழிந்த தேன் கலந்த
இனிய தாடகத்துத் தெளிந்த நீரை அருந்தினர்.

     'நான்' என்பதற்கு, முன் 14-ற் கூறியது கொள்க. 'கயம்' என்பது
சினையாகு பெயராய் நீரைச் சுட்டியது.

               20
மணிநி றத்தவெழின் மைந்தனை மூடு
மணிநி றத்துநுரை யந்துகி லாடை
பணிநி றத்தவொளிர் பாணியி னல்லாள்
புணிநி றத்தமலர் பூண்சுனை தோய்த்தாள்.
 
மணி நிறத்த எழில் மைந்தனை மூடும்
அணி நிறத்த நுரை அம் துகில் ஆடை,
பணி நிறத்த ஒளிர் பாணியின் நல்லாள்,
புணி நிறத்த மலர் பூண் சுனை தோய்த்தாள்.

     அணிகலன் போன்ற ஒளி பொருந்திய கைகளைக் கொண்ட
நல்லவளாகிய மரியாள், மாணிக்க நிறம் கொண்ட தன் அழகிய மகனைப்
பொதியும் அழகிய நிறமுள்ள நுரைபோல் மெல்லிய பஞ்சு நூல் ஆடையை,
மகுடம் போல் மலர்களைப் புனைந்து நின்ற அத்தடாகத்தில் நனைத்துத்
துவைத்தாள்.

               21
தோய்ந்த தன்மையொடும் அச்சுனை நன்னீர்
மேய்ந்த தன்மையொடு வெம்பிணி யாவும்
வாய்ந்த தன்மையொடு மாறவு நாத
னீய்ந்த தன்மையுள தின்றும தெஞ்சா.
 
தோய்ந்த தன்மையொடும் அச்சுனை நல் நீர்
மேய்ந்த தன்மையொடு வெம் பிணி யாவும்
வாய்ந்த தன்மையொடு மாறவும் நாதன்
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா.