பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்446

     அலைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தமக்குள் அசைந்தாடிய
தன்மையால், இலைகளிடையே இடமெங்கும் விரிந்து நின்ற அழகிய
மலர்கள் சேர்ந்து ஆடவே, தன் தலை மீது தன் கைகளையெல்லாம்
ஒருங்கே ஏற்றித் தொழுத நிலையை ஒருங்கே காட்டியது அத்தடாகத்தின்
அத்தன்மையான தோற்றம்.

                 பறவைகளின் மகிழ்ச்சி

     - மாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமா.

                24
பானேரிள நிலவூறிய பணிமாமதி முகமுன்
வானேரிள பனிமானிய மதுமாதரு வடியத்
தேனேரிள குரலோடிள வளிபாவிசை திருக
மீனேரிள சிறைமாமயி னடமாடின மிகவே.
 
பால் நேர் இள நிலவு ஊறிய பனி மா மதி முக முன்
வான் நேர் இள பனி மானிய மது மா தரு வடிய,
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக,
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே.

     பால் போன்ற இளங் கதிர் தோன்றிய அழகிய நிறை மதி போன்ற
திருமகன் முகத்தில் வானம் தரும் மென்மையான பனியைப் போன்ற
தேனைப் பெரிய மரங்கள் வடித்து நிற்க, தேன் போன்ற இளங் குரலோடு
இள வண்டுகள் பாடல்களை இசையோடு பாடிக் கொண்டிருக்க, விண்மீன்
போன்ற இளஞ் சிறகு கொண்ட கரு மயில்கள் மிகுதியாகக் கூடி நின்று
நடனமாடின.

                  25
கயலொத்தன விழியுற்றன களிமாதர்கள் கருவிட்
புயலொத்தன திரையுட்களி விளையாடின புரைகண்
டியலொத்தன கயமுட்டிரி யிறகாருயி ரினமும்
வியலுற்றன சிறைவிட்டயல் விளையாடின வினிதே.
 
கயல் ஒத்தன விழி உற்றன களி மாதர்கள், கரு விண்
புயல் ஒத்தன திரையுள் களி விளையாடின புரை கண்டு,
இயல் ஒத்தன, கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும்,
வியல் உற்றன சிறை விட்டு, அயல் விளையாடின இனிதே.