பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்447

     கயல் மீன் போன்ற கண்களைக் கொண்ட களிப்புள்ள மகளிர்,
கரிய வான் மேகம் போன்ற தடாகத்துத் திரையுள்ளே களித்து
விளையாடின ஒப்புமை கண்டு, அவ்வியல்புக்கு ஏற்றவாறு, அத்தடாகத்துள்
திரியும் இறகு கொண்ட அன்னம் போன்ற உயிரினங்களும், அகலமான தம்
சிறகுகளை விரியவிட்டு, அம்மூவர்க்கும் அயலே இனிதாய் விளையாடிக்
கொண்டிருந்தன.

     ஒத்தன, உற்றன என்னும் சொற்கள், ஒத்த, உற்ற என்ற பெயரெச்சப்
பொருளில் இடையே 'அன்' சாரியை பெற்று நின்றன.

                  26
புள்ளும்பல குருகும்பக வினமுங்கவின் பொருவா
விள்ளும்பரி சனமும்பகை விலகுங்களி விளைபோ
ருள்ளும்படி குறுகும்படி யுகளும்படி யுளவே
துள்ளும்பரி யெனவந்தெதிர் தொடர்கின்றவை
                                   துறுமால்.
 
புள்ளும் பல, குருகும், பக இனமும், கவின் பொருவா
விள்ளும் பரிசு அனமும், பகை விலகும் களி விளை போர்
உள்ளும் படி, குறுகும் படி, உகளும் படி உளவே;
துள்ளும் பரி என வந்து, எதிர் தொடர்கின்றவை துறும் ஆல்.

     பல வகைப் பிற பறவைகளும், நாரைகளும், கொக்கு இனங்களும்.
அழகில் பிறவெல்லாம் ஒவ்வாதன என்று புகழ்ந்து சொல்லப்படும் தன்மை
கொண்ட அன்னங்களும், பகையினின்று விலகியதும் களிப்பு
விளைவிப்பதுமான ஒரு போரை நினைந்த வண்ணமாகவும், ஒன்றையொன்று
நெருங்கும் தன்மையாகவும், குதிக்கும் தன்மையாகவும் அங்கு உள்ளன;
அவை குதிக்கும் குதிரை போல் அங்கு வந்து, அம்மூவர்க்கும் எதிரே
தொடர்ந்து வந்து நெருங்கி நிற்கும்.

     'பல புள்ளும்' என மாற்றிக் கூட்டுக. 'ஆல்' அசைநிலை

                     27
தேங்காவியொ டுளமற்றலர் திளைதேறலை யுணவந்
தாங்காயின வளிபற்பல வரவத்தொலி யதிரத்
தூங்காவொலி முரசொத்தெழு தொனியிற்றமு
                               டொடர்போர்
நீங்காதன பறவைக்குல நிகருஞ்சமர் நெடிதே.