தேன் காவியொடு
உள மற்று அலர் திளை தேறலை
உண வந்து
ஆங்கு ஆயின அளி பற்பல அரவத்து ஒலி அதிர,
தூங்கா ஒலி முரசு ஒத்து எழு தொனியில் தமுள்
தொடர் போர்
நீங்காதன பறவைக் குலம் நிகரும் சமர் நெடிதே. |
தேன் நிறைந்த
குவளையோடு மற்றுமுள்ள மலர்களில்
நிறைந்துள்ள தேனை உண்ண வந்து அங்குச் சேர்ந்த வண்டுகள் தம்
இனத்துக்கு ஏற்பப் பற்பல ஆரவார ஒலியோடு முழங்கவும், ஓயாது
ஒலிக்கும் முரசு போன்று எழும் ஓசையோடு தமக்குள் தொடரும்
விளையாட்டுப் போர் நீங்காத பறவை இனங்கள் அவ்வொலிப் போரில்
நீடித்து ஒத்து நிற்கும்.
தேன் + காவி
- தேங்காவி எனப் புணர்ச்சியில் விகாரமாயிற்று.
28 |
இரியும்பல
குறுகும்பல வெதிரும்பல விறகை
விரியும்பல வறையும்பல மெலியும்பல விளைபோர்
புரியும்பல முரியும்பல பொலியும்பல புடையிற்
பிரியும்பல குமுறும்பல தொனியும்பரம் பெறவே. |
|
இரியும் பல;
குறுகும் பல; எதிரும் பல; இறகை
விரியும் பல; அறையும் பல; மெலியும் பல; விளை போர்
புரியும் பல; முரியும் பல; பொலியும் பல; புடையின்
பிரியும் பல; குமுறும் பல, தொனி உம்பரம் பெறவே. |
பல பறவைகள்
தனித்துத் திரியும்; வேறு பல நெருங்கி வரும்;
இன்னும் பல எதிர் கொண்டு நிற்கும்; மற்றும் பல இறகை விரிக்கும்;
பின்னும் பல இறக்கைகளை அடித்துக் கொள்ளும்; வேறுபல போரில்
மெலியும்; இன்னும் பல விரும்பிய போரைத் தொடர்ந்து நடத்தும்; மற்றும்
பல போரில் தோற்று முறியும்; பின்னும் பல போரிற் பொலிந்து விளங்கும்;
வேறு பல பக்கமாய்ப் பிரிந்து செல்லும்; இன்னும் பல தம் முழக்கத்தொனி
வானத்தை எட்டுமாறு குமுறும்.
'விரிக்கும்'
என்ற பிறவினை, 'விரியும்' எனத் தன்வினை வடிவில்
நின்றது.
|