பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்450

                   31
பெடைநாணின தெனநாணறை பிளிர்தாமரை
                             நெடுங்காக்
கடைநாணின வனமேவுபு கரவாயின முறைகண்
டிடையாயின பலபூமுகை யினநக்கென மலர
நடையாடின பறவைக்குல நனியார்த்தன நகவே.
 
பெடை நாணினது என, நாள் நறை பிளிர் தாமரை
                                   நெடுங் காக்
கடை, நாணின அனம், மேவுபு கரவு ஆயின முறை கண்டு,
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர,
நடை ஆடின பறவைக் குலம் நனி ஆர்த்தன நகவே.

     அப்பெட்டை அன்னம் அதனால் நாணியது எனக் கண்டு, தானும்
நாணின ஆண் அன்னம், புதிய தேனைச் சிந்தும் தாமரை நெடுங்காட்டின்
கடைக்கோடியை அடைந்து மறைந்து கொண்ட முறையைக் கண்டு,
இரண்டிற்கும் இடையே நின்ற பல பூவரும்புக் கூட்டம் சிரித்தாற் போல்
மலர, பக்கத்தே நடனமாடிக் கொண்டிருந்த பறவை இனமெல்லாம் .கூடிச்
சிரித்து மிக்க ஆரவாரம் செய்தன.

     'நாள்' என்பது, 'நாள் மலர்' என்ற இடத்துப் போல், 'புதுமை'
சுட்டுவது.

                  32
பந்தொத்தன பனிமுற்றலர் பறவைக்குல மெறியச்
சந்தொத்தன மதுரத்துளி சரியப்புய றருநீர்ச்
சிந்தொத்தன சிதறிப்பினர் தெளியத்தட மதனூ
டிந்தொத்தன வுடுவொத்தன விணர்மற்றுகு மியலே.
 
பந்து ஒத்தன பனி முற்று அலர் பறவைக் குலம் எறிய,
சந்து ஒத்தன மதுரத் துளி சரிய, புயல் தரும் நீர்ச்
சிந்து ஒத்தன சிதறி, பினர் தெளி அத் தடம் அதன் ஊடு,
இந்து ஒத்தன, உடு ஒத்தன, இணர் மற்று உகும் இயலே.

     பந்து போன்ற குளிர்ச்சி நிறைந்த பெரு மலர்களைப் பறவை
இனங்கள் பறித்து மேலே எறியவே, அவற்றினின்று சந்தனம் போன்ற
இனிய தேன் துளிகள் பாய்ந்து, மேகம் பொழியும் நீர்த் துளிகள் போல்
சிதறி, பின் தெளிந்த நீர் கொண்ட அத் தடாகத்தின் ஊடே அம்மலர்கள்
விழும் தன்மையால், திங்களையும் விண்மீன்களையும் ஒத்துத் தோன்றின.