பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்452

     'தோன்றும்' என்ற சொல் வருவித்து முடிக்கப்பட்டது.

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.

            35
பற்ற லாற்செயிர் பற்றிருண் மாக்களே
கற்ற நூற்பய னின்றியுங் காசினி
யுற்ற நாதனைத் தாமுண ராமையி
னிற்றெ லாமறி வில்லவை செய்தவே.
 
பற்றலால் செயிர் பற்று இருள் மாக்களே,
கற்ற நூல் பயன் இன்றியும், காசினி
உற்ற நாதனைத் தாம் உணராமையின்,
இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவை.

     பற்றின் காரணமாகப் பாவத்தைப் பற்றிக் கொண்ட இருண்ட
உள்ளம் படைத்த மக்கள், தாம் கற்ற நூலாற் பெறும் முதன்மைப் பயன்
இல்லாத விதமாய், இவ்வுலகில் வந்தடைந்த ஆண்டவனைத் தாம் அறிந்து
கொள்ளாமையால், அறிவில்லாத பறவைகள் அவ்வாண்டவனுக்கு
இவையெல்லாம் செய்தன.

     "கற்றதனால் ஆய பயன்என்கொல், வால்அறிவன், நல்தாள்
தொழாஅர் எனின்?" என்றவாறு (குறள் 2), ஆண்டவனைக் கல்வியின்
பயனாக அறியாமலும், அறிந்ததற்கு அடையாளமாக அவன் தாள்
தொழாமையாலும், கற்ற நூல் பயன் இல்லாததாயிற்று.

            36
அறிவி லாவுயிர் தாமறிந் தாலெனச்
செறிவி ழாவணி யிற்சிறப் பாடின
நெறிவி டாக்கனி நோக்கிய நேரிலார்
முறிவி லாசிமொ ழிந்தெழுந் தேகினார்.
 
அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என,
செறி விழா அணியின் சிறப்பு ஆடின.
நெறி விடாக் கனி நோக்கிய நேர் இலார்
முறிவு இல் ஆசி மொழிந்து, எழுந்து ஏகினார்.