அறிவில்லாத
அவ்வுயிர்கள் தாம் அவ்வாண்டவனை அறிந்த
தன்மையாக, இவ்வாறெல்லாம் செறிந்த விழாக் கோலம் போலச் சிறப்புக்
கொண்டாடின. அவற்றை நெறி பிறழாத கனிவோடு நோக்கிய நிகரற்ற
திருக் குடும்பத்தினர், அழிவில்லாத ஆசிகளைக் கூறி, அங்கிருந்து எழுந்து
செல்லத் தொடங்கினர்.
37 |
ஈய்ந்த
நல்வரத் தேந்திய வாவிநின்
றாய்ந்த மாண்பினர் போகையி லல்லலுட்
பாய்ந்த தன்மையி லப்பற வைக்குலம்
வேய்ந்த வானுற வார்த்தன விம்மியே. |
|
ஈய்ந்த நல்
வரத்து ஏந்திய வாவி நின்று,
ஆய்ந்த மாண்பினர், போகையில், அல்லல் உள்
பாய்ந்த தன்மையில், அப் பறவைக் குலம்,
வேய்ந்த வான் உற ஆர்த்தன விம்மியே. |
ஆராயத் தக்க
மாண்பு படைத்த அம்மூவரும், தாம் ஈந்த
நல்ல வரத்தினால் உயர்வு கொண்ட அத்தடாகத்தை விட்டுப் பிரிந்து
போகையில், அப் பறவை இனங்கள், தம் உள்ளத்துள் துன்பம் பாய்ந்த
தன்மையாக, கவிந்து நின்ற வானத்தை எட்டுமாறு அழுது முழங்கின.
'ஈந்த'
என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'ஈய்ந்தது' என
நின்றது,
நீர்
வர மடைந்த படலம் முற்றும்.
ஆகப்
படலம 21க்குப் பாடல்கள் 1969
|