திருக்குடும்பத்தினர்
எசித்து நாட்டினுட் சென்று சேர்ந்த செய்தியைக்
கூறும் பகுதி.
வானவர்
வழி காட்டல்
-
மா, கூவிளங்காய், கூவிளம், தேமா, - மா, கூவிளங்காய், கூவிளம்,
தேமா.
1 |
அருளு லாவுமித
யத்திலி ருந்தே யன்பி யற்றியரி தாயெனை யாளு
மிருளு லாவுமுயிர் யாவும ளிப்ப வின்பி யற்றியுல கெய்திய மூவர்
தெருளு லாவுமவர் பூவடி சூடித் தெள்ளி யற்றியவர் பாவிசை கூறப்
பொருளு லாவியவெ சித்தெனு நாடு புக்கி யற்றியவை யான்புகல் கிற்பேன். |
|
அருள் உலாவும்
இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை
ஆளும்,
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய
மூவர்
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி, தெள் இயற்றி அவர் பா இசை
கூற,
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன். |
தாமே தந்துதவிய
தெய்வ அருள் நிலவும் என் இதயத்தில் இருந்து
கொண்டு, அன்பு செய்து அரிய முறையால் என்னை ஆண்டு நடத்துபவரும்,
பாவ இருளில் உலாவிக்கொண்டிருக்கும் மனித உயிர்கள் யாவற்றையும்
மீட்டுக் காக்க வேண்டி இன்பம் காட்டி இவ்வுலகு வந்தடைந்தவருமாகிய
இயேசு மரியாள் சூசை என்னும் அம்மூவர்தம் தெளிவு கொண்ட மலர்
அடிகளை என் தலைமேற் சூடி, அவர்தம் புகழைத் தெளிவுபடுத்திக் கூற
முற்பட்டு, பொருள் வளம் மிக்க எசித்து என்னும் நாட்டுள் புகுந்து அவர்
செய்தவற்றை நான் சொல்லத் தொடங்குவேன்.
'அவர்
இசை பா தெள் இயற்றிக் கூற' என மாற்றிக் கூட்டுக.
'ஆளும் மூவர், எய்திய மூவர்' எனக் கூட்டுக.
|