2 |
மீம லிந்தசுடர்
மூன்றணி மீன்போல் விண்ம லிந்ததள மூவரை நண்ணக்
காம லிந்தமணம் வீசிய தீந்தண் கள்ம லிந்தமல ரேடினை விள்ளத்
தேம லிந்தகனி யார்தரு யாவுஞ் சென்ம லிந்ததலை தாழ்ந்துவ ணங்கப்
பூம லிந்தநெறி மூவரு மேகிப் புரைம லிந்தவினை தீர்க்குவ போனார். |
|
மீ மலிந்த சுடர்
மூன்று அணி மீன் போல், விண் மலிந்த தளம் மூவரை
நண்ண,
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள,
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க,
பூ மலிந்த நெறி மூவரும் ஏகி, புரை மலிந்த வினை தீர்க்குவ போனார். |
மேலே பொலிவுடன்
விளங்கிய ஞாயிறு, திங்கள், நெருப்பு
என்னும் முச்சுடர்களை அணியாகச் சூழ்ந்த விண்மீன்கள் போல்,
வானத்தில் செறிந்துள்ள வானவர் படை அம்மூவரையும் நெருங்கிச்
சூழவும், சோலையில் நிறைவான மணம் வீசிய இனிய குளிர்ந்த தேன்
நிறைந்த மலர்கள் தம் இதழ்களை விரிக்கவும், தேன் மிகுந்த கனிகள்
நிறைந்த மரங்களெல்லாம் மேகங்கள் செறிந்த தம் தலைகளைத் தாழ்த்தி
வணங்கவுமாக, அம்மூவரும் பூக்கள் நிறைந்த வழித்தடத்தில் நடந்து
சென்று, எசித்து நாட்டாரின் பாவம் நிறைந்த வினைகளைத் தீர்க்கப்
போயினர்.
3 |
மிக்க டங்கியதி
றந்தகு வேந்தன் வெருவி னாலெனவொ ளிக்குபு
வந்து
தொக்க டங்கியவெ சித்துயிர் யாவுந் துகளொ ழிப்பவவ ணெய்திய
நாதன்
றிக்க டங்கிலும றாதருள் செய்யச் செவ்வ னாயவழி கூட்டிலர் நாடு
புக்க டங்கியபு ரம்பல சேரும் புடைவ ளைந்தவழி காட்டினர் வானோர். |
|