7 |
அடிவைத்தன
வன்பினொ
டாங்கெவணுங்
கடிவைத்தன பூமலர் கான்றமது
பொடிவைத்தவ ழிப்புடை சேறுலவ
விடிவைத்தன காரிணை தூறினதே. |
|
அடி வைத்தன அன்பினொடு,
ஆங்கு எவணும்
கடி வைத்தன பூ மலர் கான்ற மது,
பொடி வைத்த வழிப் புடை சேறு உலவ,
இடி வைத்தன கார் இணை தூறினதே. |
அம்மூவர் அடி
வைத்த அன்பின் தன்மையால், அங்கு மணம்
பொருந்தப் பூத்த மலர்கள் எங்கும் பொழிந்த தேன், தூசி கிடந்த வழிப்
பக்கமெல்லாம் சேறாகும்படி, இடியைக் கொண்ட கருமேகத்திற்கு
இணையாகப் பெய்து கொண்டிருந்தது.
8 |
கானேந்திய
காவுக டோறுமயில்
மீனேந்திய தோகைவி ரித்துலவி
யூனேந்திய நாதனு றப்பறவை
தேனேந்திய தீம்புகழ் பாடுவன. |
|
கான் ஏந்திய
காவுகள் தோறும், மயில்
மீன் ஏந்திய தோகை விரித்து உலவி,
ஊண் ஏந்திய நாதன் உற, பறவை
தேன் ஏந்திய தீம் புகழ் பாடுவன. |
ஊனுடலைத் தாங்கிய
ஆண்டவன் அங்கு வருதலால், மணம் ஏந்தி
நின்ற சோலை தோறும், மயில்கள் விண்மீன் போன்ற கண்களைத் தாங்கிய
தம் தோகைகளை விரித்து ஆடி உலாவவும், ஏனைய பறவைகள் தேனை
ஏந்தியது போன்ற அவனது இனிய புகழைப் பாடிக் கொண்டிருக்கும்.
|