13 |
புரந்தருந்
தயையைக் காட்டிப் புரைதரு நரகி லுய்ப்ப
வரந்தருந் தேவ ராக வணங்கிய வலகை யீட்ட
முரந்தருந் திரத்திற் றம்மை யுதைத்தன னறியா தெஞ்சி
நரந்தரும் வேகத் தோடி நரகிடைப் புதைத்த வன்றே. |
|
புரந்த அருந்
தயையைக் காட்டி, புரை தரும் நரகில் உய்ப்ப,
வரம் தரும் தேவராக வணங்கிய அலகை ஈட்டம்,
உரம் தரும் திறத்தில் தம்மை உதைத்தனன் அறியாது எஞ்சி,
தரம் தரும் வேகத்து ஓடி, நரகிடைப் புதைத்த அன்றே. |
பேணினாற் போன்ற
அரிய தயவை வெளியே காட்டி, பாவம்
விளைவிக்கும் நரகத்திற் கொண்டு சேர்க்குமாறு, வரம் தரும் தேவராக
மக்கள் கருதி வணங்கிய பேய்களின் கூட்டம், தன் வலிமை தரும்
திறத்தோடு தம்மை உதைத்தவன் யாரென்று அறிய இயலாது மெலிந்து,
அச்சம் தரும் வேகத்தோடு ஓடி, தம்மை நரகத்துள் புதைத்துக் கொண்டன.
'அன்றே' அசைநிலை.
புரந்த + அரும் - 'புரத்தவரும்' எனற்பாலது,
தொகுத்தல் விகாரமாகப் 'புரந்தரும்' என நின்றது.
14 |
கொன்னொளித்
திறத்தி னின்ற குணுக்கின நரகில் வீழ்கப்
பொன்னொளிக் கோயில் யாவும் பொதிர்மணி யுருவுந் தேரு
மின்னொளிச் சாயல் கெட்டு வீழவுங் கண்ட யாரு
மன்னொளித் திறத்த நாதன் வழியுறா வியந்து நின்றார். |
|
கொன் ஒளித்
திறத்தின் நின்ற குணுங்கு இனம் நரகில் வீழ்க,
பொன் ஒளிக் கோயில் யாவும், பொதிர் மணி உருவும், தேரும்
மின் ஒளிச் சாயல் கெட்டு வீழவும் கண்ட யாரும்,
மன் ஒளித் திறத்த நாதன் வழி உறா, வியந்து நின்றார். |
|