பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்462

     வீணான ஒளித் திறத்தோடு நிலைகொண்டிருந்த பேய்க் கூட்டம்
இவ்வாறு நரகத்தில் விழவே, பொன்னொளி கொண்ட அவற்றின்
கோவில்கள் யாவும், நிறைந்த மணிகளால் அழகு செய்யப்பட்ட உருவச்
சிலைகளும் தேர்களும் தம் மின்னல் ஒளி கொண்ட சாயல் கெட்டு
வீழ்ந்தன. அவற்றைக் கண்ட யாவரும், நிலையான ஒளித்திறம் கொண்ட
ஆண்டவன் வழியை அறிந்து கொள்ளாமல், வியந்து நின்றனர்.

     குணங்கு + இனம் - குணிக்கு + இனம்-குணுக்கினம்.

                 15
நம்பிய வுயிரைக் கொல்ல நாட்டிய தேவ ராக
வெம்பிய பகையிற் றீய வினைவிளைத் திருந்த பேய்கள்
பம்பிய முகத்தின் முன்னர் பதைப்பவீழ்ந் தொளிப்ப நோக்கி
யம்பிய மலர்வாய்க் கோலா னகத்துணுஞ் சுவையின் விள்ளான்.
 
நம்பிய உயிரைக் கொல்ல, நாட்டிய தேவராக,
வெம்பிய பகையின் தீய வினை விளைத்து இருந்த பேய்கள்,
பம்பிய முகத்தின் முன்னர் பதைப்ப வீழ்ந்து ஒளிப்ப, நோக்கி
அம்பிய மலர் வாய்க் கோலான் அகத்து உணும் சுவையின் விள்ளான் :


     தம்மை நம்பிய உயிர்களை நரக நெருப்பிலிட்டுக் கொல்லாது
கொல்லுமாறு, அவ்வுயிர்கள் நிலை நாட்டிய தேவராக இருந்து கொண்டு,
அவ்வுயிர்கள் மீது கொதித்த பகையால் அவற்றைக் கொண்டே தீவினை
விளைவித்துக் கொண்டிருந்த பேய்கள், தம்மைச் சினந்த குழந்தைநாதன்
முகத்தின் முன்னர் பதைத்து வீழ்ந்து நரகில் ஒளிந்துகொண்டதை நோக்கி,
தேனாகிய நீரைக் கொண்டுள்ள மலர்கள் பொருந்திய கோலைத் தாங்கிய
சூசை தன் மனத்தால் உண்ணும் மகிழ்ச்சிச் சுவை நீங்காதவனாயினான்.

                      16
பொய்த்திறத் தரசற் கஞ்சிப் போதல்போ லொளிப்ப வெய்தி
யத்திறத் துணர்ந்த சூட்சி யருட்பய னிதுவோ விங்கண்
ணித்திறத் தன்பின்மாட்சி யெய்துவ ருண்டோ வென்னக்
கைத்திறத் தலர்த்தா ணீவிக் கண்ணினீ ராட்டி னானே.