"அறிவு உயிர்
இல்லாத மரமே மனிதரை இரட்சிக்கும் தெய்வம்
என்பது, கல்விக்கும் நல்லறிவுக்கும் ஒத்திராமையால், அம்மரத்தைத்
தேவனென்று வணங்கினவர், 'நன்னூற் சீர்நலம் ஒழிந்தனர்' என்றார்
என்க" என்பது பழையவுரை அடிக்குறிப்பு.
20 |
மடநடை கண்டபேயும்
வடுவள ரமைதி யென்னத்
தடநடை வளர்ந்த பைம்பூந் தருவிடைக் குடியாய் வைகிப்
படநடை பொறித்த நச்சுப் பாந்தளி னுருவிற் கான்ற
விடநடை நெடுநாள் யார்க்கும் விடைமொழி கூறிற் றன்றோ. |
|
மட நடை கண்ட
பேயும், வடு வளர் அமைதி என்ன,
தட நடை வளர்ந்த பைம் பூந் தருவிடைக் குடியாய் வைகி,
பட நடை பொறித்த நஞ்சுப் பாந்தளின் உருவில், கான்ற
விட நடை, நெடு நாள் யார்க்கும் விடை மொழி கூறிற்று அன்றோ. |
அம் மக்களின்
அறிவில்லாப் போக்கைக் கண்ட பேயும், பாவம்
வளர்வதற்கு ஏற்ற சமயம் இதுவென்று கருதி, பெருந் தோற்றமாக
வளர்ந்து நின்ற பசிய மலர்கள் நிறைந்த அம் மரத்தில் தான் குடியாய்த்
தங்கியிருந்து, படம் கொண்ட தன்மையுள்ள நஞ்சுள்ள பாம்பின் உருவத்தில்,
நஞ்சு கக்கிய தன்மையாக, தன்னை வந்து வினவின யாவர்க்கும் நெடுங்
காலமாக விடை மொழி கூறிக் கொண்டிருந்தது.
'அன்றோ' அசைநிலை.
நஞ்சு + பாந்தள் - நச்சு + பாந்தள் = நச்சுப்
பாந்தள்.
21 |
கொழுந்தன முகத்து நாதன் குறுகவொன் றறியா செந்தீ
விழுந்தன பேயு நீங்கி வினையரிந் துவந்த தேபோ
லெழுந்தன மரந்தன் னெற்றி யிறைஞ்சிய திறத்து மூவர்
செழுந்தன வடியிற் செல்லச் சிறப்பொடு வளைத்த தம்மா. |
|