|
கொழுந் தன முகத்து
நாதன் குறுக, ஒன்று அறியா, செந் தீ
விழுந்து அன பேயும் நீங்கி, வினை அரிந்து உவந்ததே போல்
எழுந்து அன மரம், தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர்
செழுந் தன அடியில் செல்லச் சிறப்பொடு வளைத்த தம்மா. |
வளமான பொன்
போன்ற முகத்தைக் கொண்ட குழந்தை நாதன்
அணுகி வரவும், காரணம் ஒன்றும் அறியாமலே, நரகத்துச் செந்நெருப்பில்
விழுந்து அப் பேய் தன்னை விட்டு நீங்கப் பெற்று, பாவ வினையை
அரிந்து களைந்து மகிழ்ந்ததே போல் அம்மரம் நிமிர்ந்தெழுந்து, வணங்கிய
தன்மையாகத் தன் நெற்றி அம்மூவர் தம் செழும் பொன் போன்ற
அடிகளில் சென்று பொருந்துமாறு சிறப்போடு வளைத்து நின்றது.
'அம்மா' வியப்பிடைச்
சொல்; அடுத்த பாடலுக்கும் இது பொருந்தும்.
22 |
மைவ்வகைத்
திறப் பேய் மாக்கள் வளங்கெடத் தெரிந்த சாகி
யுய்வ்வகைத் திறத்தில் வாய்ப்ப வுயர்வரங் கடவு ளீந்த
மெய்வ்வகைத் திறத்தி லுண்ட விரிந்தபா சிலைநோ யாவுங்
கொய்வ்வகைத் திறத்திந் நாளுங் குன்றிலா விளங்கிற் றம்மா. |
|
மை வகைத் திறப்
பேய், மாக்கள் வளம் கெட, தெரிந்த சாகி,
உய் வகைத் திறத்தில் வாய்ப்ப, உயர் வரம் கடவுள் ஈந்த
மெய் வகைத் திறத்தில், உண்ட விரிந்த பாசு இலை நோய் யாவும்
கொய் வகைத் திறத்து, இந் நாளும் குன்று இலாவிளங்கிற்று அம்மா. |
மக்களின் வளம்
கெடுமாறு, குற்றமுள்ள வகையான திறம் படைத்த
பேய் முன் தெரிந்து கொண்ட அதே மரம், மக்கள் உய்வதற்கான
வகையைச் சார்ந்த திறத்தில் சிறக்குமாறு, உயர்ந்த வரத்தைக் கடவுள்
தனக்குத் தந்த மெய் வகைப்பட்ட திறத்தினால், மக்கள் பறித்து உண்ட
தன் விரிந்த பசுமையான இலை நோய்கள் யாவற்றையும் களையும்
வகையான திறங்கொண்டு, இக்காலத்திலும் அவ்வளம் குன்றுதல்
இல்லாமல் விளங்கிற்று.
பசுமை
+ இலை - பசு + இலை - பாசு + இலை = பாசிலை.
|