பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்469

     'கவிழ்ந்த கார் குழல் நலம் செய்யும்' என மாற்றிக் கூட்டுக.
'நாஞ்சில்' என்பது 'ஞாஞ்சில்' திரிந்தது, விகாரம்.


             27
கேழ்முக நகரடி கிளர்சி லம்பென
வேழ்முகம் பிரிந்தநீ லென்னுந் தீம்புனல்
கூழ்முக நிலங்கெடப் பேய்முன் கொண்டவேழ்
காழ்முக வரவெனக் கவர்கொண் டோடுமால்.
 
கேழ் முக நகர் அடி கிளர் சிலம்பு என
ஏழ் முகம் பிரிந்த நீல் என்னும் தீம் புனல்
கூழ் முக நிலம் கெடப் பேய் முன் கொண்ட ஏழ்
காழ் முக அரவு எனக் கவர் கொண்டு ஓடும் ஆல்.


     அழகிய முகம் படைத்த அந்நகரத்தின் அடியில் கிடந்து ஒலிக்கும்
சிலம்புபோல, ஏழு முகமாகப் பிரிந்து பாயும் நீல் என்னும் இனிய நீர்
கொண்ட ஆறு, பயிர் செழித்த இந்நிலவுலகம் கெடுமாறு பேய்
முற்காலத்தில் உருவமாய்க் கொண்ட ஏழு நஞ்சுத் தலையுள்ள நாகம்
போலக் கவர் பிரிந்து ஓடும்.

     'ஆல்' அசைநிலை. பின்வரும் பாடலுக்கும் இது கொள்க. 'முகம்'
தலைக்கு ஆகு பெயர்.

                28
வரையுயிர்ப் பெனப்புகை மாட நெற்றிமே
னுரையுயிர்ப் பெனவிடா நுடங்கும் பூங்கொடி
யுரையுயிர்ப் புறாதென வொளிர்கை நீட்டியே
விரையுயிர்ப் பொடுமிவர் விளித்தல் போலுமால்.
 
வரை உயிர்ப்பு எனப் புகை மாட நெற்றி மேல்,
நுரை உயிர்ப்பு உன விடா நுடங்கும் பூங் கொடி,
உரை உயிர்ப்பு உறாது என, ஒளிர் கை நீட்டியே,
விரை உயிர்ப்பொடும் இவர் விளித்தல் போலும் ஆல்.


     மலை மூச்சு விடுதல் போல் நறுமணப் புகை சூழும் மாளிகைகளின்
உச்சி மீது, நுரை பொங்கிப் பரவுதல் போல் இடைவிடாமல் அசையும்
அழகிய துணிக்கொடிகள், தம் வாயின் உரை அவ்விடம் சென்று
எட்டாதெனக்கண்டு, ஒளி பொருந்திய கைகளை நீட்டி, விரைந்து
அடிக்கும் காற்றோடு கூடி இம்மூவகையும் அழைத்தல் போலத் தோன்றும்.