பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்473

இருபத்துமூன்றாவது

குணுங்கு மந்திரப் படலம்

     பேய்களுக்கு நேர்ந்த துன்பங் கண்டு, பேய்க்கரசன் பேய்களைக்
கூட்டி கலந்துரையாடல் நடத்திய செய்தி கூறும் பகுதி. மந்திரம் -
ஆலோசனை.

                   பேய்களைக் கூட்டுதல்

     - மா, - மா, -- காய், - மா, - மா, -- காய்

                     1
மின்னா திடித்தே றிரிந்தன்ன வெருவிப் பதறிப்
                                  பாய்ந்துருண்டன்
றின்னா விளைக்கும் பேயினங்க ளெசித்து நீங்கித் தீநிரயம்
பன்னா டுயரி லெண்மடங்காய்ப் பனிப்புற் றார்ப்ப
                                   வீழ்ந்தனகாற்
றன்னா டயர்வுற் றயர்ந்தரசன் றருமி னுற்ற கொடிதென்றான்.
 
மின்னாது இடித்து ஏறு இரிந்து அன்ன, வெருவிப் பதறிப் பாய்ந்து
                                         உருண்டு, அன்று,
இன்னா விளைக்கும் பேய் இனங்கள் எசித்து நீங்கி, தீ நிரயம்,
பல்நாள் துயரில் எண் மடங்காய்ப் பனிப்பு உற்று, ஆர்ப்ப வீழ்ந்தன
                                         கால்,
தன் நாடு அயர்வு உற்று, அயர்ந்து அரசன், "தருமின் உற்ற கொடிது"
                                         என்றான்.

     திருக்குடும்பம் அங்கு வந்து சேர்ந்த அன்றே, பாவமென்னும்
துன்பத்தை விளைவிக்கும் பேய்க் கூட்டங்கள் எசித்து நாட்டை விட்டு
நீங்கி, மின்னாமல் இடித்து அவ்விடி தம் மேல் பாய்ந்தாற் போல், தாம்
அஞ்சிப் பதறிப் பாய்ந்து உருண்டு, பல நாளாய்த் தாம் அனுபவித்து
வரும் துயரைக் காட்டிலும் எட்டு மடங்காகத் துன்புற்று நடுங்கி, தீயுள்ள
நரகத்தில் முழங்கிக் கொண்டு விழுந்தபோது, தன் நாடு சோர்ந்த
காரணத்தால், பேய்க்கரசன் தானும் சோர்வுற்று, மற்றப் பேய்களை
நோக்கி, "நேர்ந்த கொடுமையை எடுத்துச் சொல்லுங்கள்" என்றான்.

     "தம்மைப் பகைத்துத் துரத்தினவன் ஆரென்று அறியாமலும்,
அவ்விடையூறு வருமுன்னே அடையாளமொன்று அறியாமலும், இருந்தாப்
போலே விழுந்ததினால், 'மின்னாமல் இடித்து இடி விழுந்தது போலப்
பசாசுகள் விழுந்தன' என்றார் என்க" என்பது பழையவுரை அடிக்குறிப்பு.