2 |
தெள்ளுண்
டமுதா ரெசித்திறைஞ்சுந் தேவர் யாமே
மேல்வயத்தாற்
றள்ளுண் டெரிவாய் நரகிடத்திற் சரிந்தோ மென்ன
வறிந்ததலால்
வள்ளுண் டெம்மைச் சிதைத்தழித்த வலக்கை யறியோ
மன்னவெனா
வுள்ளுண் டுமிழ்ந்த சினத்தலறி யுரைசெய் தனவக்
குணுக்கினமே. |
|
"தெள் உண்ட
அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே,
மேல் வயத்தால்,
தள்ளுண்டு, எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது
அலால்,
வள் உண்டு எம்மைச் சிதைத்து அழித்த வலக்கை அறியோம்,
மன்ன!" எனா,
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன, அக் குணுங்கு
இனமே. |
அதற்கு அப்பேய்க்
கூட்டங்கள், "மன்னா, தெளிந்த அமுதம்
நிறைந்த எசித்து நாட்டவர் வணங்கும் தேவர்களாகிய நாங்கள், எம்மை
மிஞ்சிய ஒரு வல்லமையால் தள்ளுண்டு, நெருப்பு வாய்ந்த நரகத்தில்
சரிந்து விழுந்தோமென்று அறிந்து கொண்டதே அல்லாமல், வலிமை
கொண்டு எங்களைச் சிதைத்து அழித்த வலக்கை எதுவென என
அறியோம்" என்று, உள்ளத்தில் உண்டு அடங்காமல் வெளியே உமிழ்ந்த
சினத்தோடு அலறிக் கூறின.
உண்ட+அமுது -
'உண்டவமுது' எனற்பாலது, 'உண்டமுது' எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று. குணுங்கு+இனம்- குணுக்கு+இனம் - குணுக்கினம்.
3 |
பின்றா
வஞ்சத் தரிதுண்டோ பெயர்க்குந் திறங்கா ணாதிரிந்து
குன்றா வஞ்சத் தென்வலியுங் குணிக்கி லீரோ வெனச்சினந்து
பொன்றா வுணர்விற் றிறங்காணப் போவல் யானென்
றார்த்தெசித்திற்
சென்றான் சிதைவெங் கணுஞ்சிந்தச் சிந்தை சிந்தாக்
கொடுங்கோனே. |
|