இவற்றையெல்லாம்
கண்டும், இவை உண்டான காரணம் ஒன்றும் தானும்
உணர இயலாமல், மீண்டும் எரியும் நரக நெருப்பில் விழுந்து சோர்ந்தான்.
5 |
இருவா யுருவும்
பேயினத்திற் கில்லா தெனினும் வேண்டுநிலைக்
குருவாய்த் தோன்ற வுளவயத்தா லுருவாங் கெடுத்த கடிக்கரசன்
பொருவா வுருமின் னார்த்தலறிப் பொருக்கென் றலகைப்
பொருநரெலாம்
வெருவா யுளை தன் மனமெரிக்கும்வினை தீர்ப்பதற்கு
விளித்தனனால் |
|
இரு வாய் உருவும்
பேய் இனத்திற்கு இல்லாது எனினும், வேண்டு
நிலைக்கு
உருவாய்த் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன்,
பொருவா உருமின் ஆர்த்து அலறி, பொருக் கென்று அலகைப் பொருநர்
எலாம்,
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும் வினை தீர்ப்பதற்கு, விளித்தனன்
ஆல். |
அருவுருவம் உருவுருவம்
என்னும் இருவகை உருவங்களும்
பேய்ச்சாதிக்கு இல்லையெனினும், கொண்ட நிலைக்கு வேண்டிய
உருவெடுத்துத் தோன்றத் தனக்குள்ள வல்லமையால் அங்கு ஓர்
உருவமெடுத்து நின்ற பேய்க்கரசன், ஒப்பற்ற இடிபோல் முழங்கி அலறி,
அச்சத்தால் வருந்தும் தன் மனத்தை எரிக்கும் தீங்கைத் தீர்க்கும்
பொருட்டு, பேய் வீரரையெல்லாம் போருக்கென்று அழைத்தான்.
6 |
திருகி மேட
மருப்பீரேழ் செறிசெஞ் சடைநீட் டேழ்சிரத்தான்
பருகி யெரியைக் காலிரத்தப் பருதித் தடத்த விழிக்கண்ணா
னுருகி யொழுகு நஞ்சுமிழ்மா லோங்க னெடுங்கைத்
துண்டத்தான்
பெருகி யழலோ டூன்பிளிரும் பிறைக்கூ னெயிற்று வாயுருவான். |
|