பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்477

திருகி மேட மருப்பு ஈர் ஏழ் செறி, செஞ் சடை நீட்டு, ஏழ் சிரத்தான்;
பருகி எரியைக் கால் இரத்தப் பருதித் தடத்த விழிக் கண்ணான்;
உருகி ஒழுகு நஞ்சு உமிழ் மால் ஓங்கல் நெடுங் கைத் துண்டத்தான்;
பெருகி அழலோடு ஊன் பிளிரும் பிறைக் கூன் எயிற்று வாய் உருவான்.

     அப்பேய்க்கரசன் திருகி அமைந்த செம்மறிக் கிடாய்க் கொம்புகள்
பதினான்கு செறிந்தும், செந்நிறச்சடைகள் நீண்டும் விளங்கிய ஏழு
தலைகளை உடையவன்; நெருப்பைப் பருகிக்கக்கும் இரத்த மயமான வட்ட
வடிவத்துப் பெரிய கண்களை அத்தலைகளிடத்துக் கொண்டவன்; உருகிப்
பாயும் நஞ்சை உமிழும் பெரிய யானையின் நெடிய துதிக்கை போன்ற
மூக்குகளை உடையவன்; நெருப்போடு ஊனும் பெருகிப் பாயும் பிறை
போல் வளைந்த பற்களைக் கொண்ட வாய்களையும் உடைய வடிவம்
படைத்தவன்.

     திருகல் சொல்லியமையால், 'மேடம்' இங்குச் செம்மறியைச் சுட்டியது.

                       7
வேனேர் நிறுவி வேசரிநேர் விரிந்து திளைத்த மயிர்ச்செவியா
னூனே ரொழுகிப் பிணக்குப்பை யுதட்டு நாறும் பகுவாயான்
கானேர் நெருங்கித் தெங்கிலைநேர் கழுநீள் சிவந்த தாடியினான்
றானே ரிலமா சொருங்கனைத்துந் தரித்த குரக்கு முகவடிவான்.
 
வேல் நேர் நிறுவி, வேசரி நேர் விரிந்து, திளைத்த மயிர்ச் செவியான்;
ஊன் நேர் ஒழுகி, பிணக்குப்பை உதட்டு நாறும் பகு வாயான்;
கான் நேர் நெருங்கி, தெங்கு இலை நேர் கழு நீள் சிவந்த தாடியினான்;
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும் தரித்த குரக்கு முக வடிவான்.