பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்479

                       9
இன்னா னின்ன வுருக்காட்டி யெரிசூழ் பீடத் தெழுந்தோங்கி
யுன்னா தனயா வையுமுன்னி யொத்த வுருவோ டிடைசூழ்ந்து
துன்னா ழுவம்போல் கடிக்குழுவைச் சுளித்து நோக்கிச்
                                     சூளையின்வா
யன்னான் கொழுந்து விட்டெரிக்கு மார்ந்த வழல்கான்
                                     றார்த்தறைந்தான்.
 
இன்னான் இன்ன உருக் காட்டி, எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி,
உன்னாதன யாவையும் உன்னி, ஒத்த உருவோடு இடை சூழ்ந்து,
துன் ஆழுவம் போல் கடிக் குழுவைச் சுளித்து நோக்கி, சூளையின்                                           வாய்
அன்னான், கொழுந்துவிட்டு எரிக்கும் ஆர்ந்த அழல் கான்று, ஆர்த்து                                           அறைந்தான்.

     இவன் இத்தகைய உருவம் காட்டி, நெருப்பினால் சூழப்பெற்ற
பீடத்தில் உயரமாய் அமர்ந்திருந்து, முன் நினைத்தறியாத பலவற்றையும்
நினைந்து பார்த்து, தன்னை ஒத்த உருவத்தோடு இடமெல்லாம் சூழ்ந்து,
செறிந்த காடு போல் விளங்கிய பேய்க் கூட்டத்தைச் சினந்து நோக்கி,
சூளையின் வாய் போன்ற வாயைக் கொண்டுள்ள அவன், கொழுந்து விட்டு
எரிக்கும் நிறைந்த நெருப்பைக் கக்கி, பின்வருமாறு முழங்கிச் சொல்லத்
தொடங்கினான்.

     அழுவம் - காடு: இங்கு, இன்னோசைப் பொருட்டு, 'ஆழுவம்' என
நீட்டல் விகாரமாயிற்று. ஒழுங்கில்லாமல் திரண்டு நின்ற பேய்க்
கூட்டத்திற்குக் காடு உவமையாயிற்று.

                     பேய்க்கரசன் துயரம்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                       10
பீடுடை வரத்தி லொவ்வாப் பெருந்தகை நாம் வான் வாழ்ந்த
வீடுடைப் பெருஞ்சீர் மாட்சி விட்டிழந் தெரிதீத் தாழ்ந்துங்
கேடுடை யஞரென் றெண்ணா கிளர்வயத் துணர்வின் பாலா
லீடுடை யரசும் பேரு மெடுத்துவீற் றிருந்தே னன்றோ.