பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்480

"பீடு உடை வரத்தில் ஒவ்வாப் பெருந் தகை நாம், வான் வாழ்ந்த
வீடு உடைப் பெருஞ் சீர் மாட்சி விட்டு இழந்து, எரி தீத் தாழ்ந்தும்,
கேடு உடை அஞர் என்று எண்ணா, கிளர் வயத்து உணர்வின் பாலால்,
ஈடு உடை அரசும் பேரும் எடுத்து, வீற்றிருந்தேன் அன்றோ?

     "வலிமை பொருந்திய வரங்களால் மற்றவர் ஒவ்வாத பெருந் தகுதி
பெற்று விளங்கிய நாம், வானுலகில் வாழ்ந்த மோட்ச விட்டிற்கு உரிய
பெருஞ் செல்வமும் பிற மாண்புகளும் விட்டு இழந்து, எரியும் நரக
நெருப்பில் ஆழ்ந்தும், அவற்றையெல்லாம் கேடுள்ள துன்பங்களென்று
எண்ணித் தளராமல், கிளர்ந்து எழும் வலிமையாகிய அறிவின் துணையால்,
முன் இழந்ததற்கு ஈடான அரசும் புகழும் கைக்கொண்டு, இதுவரை நான்
வீற்றிருந்தேன் அல்லவா?

                     11
ஓரென்பான் பகைசெய் தாலு முலகின்பால் கொற்றங்                                    
கொண்டேன்
சீரின்பால் வணக்கங் கொண்டேன் றிருமணிச் சிகரங்                            
         கொண்டே
காரின்பால் மின்னின் மின்னுங் கனகவா லயமுங்                               
      கொண்டேன்
பாரின்பா லின்றென் னாண்மை பகையிலா குறையக்                             
        கண்டேன்
.
 
"ஓர் என்பான் பகை செய்தாலும், உலகின்பால் கொற்றம் கொண்டேன்;
சீரின் பால் வணக்கம் கொண்டேன்; திரு மணிச் சிகரம் கொண்டே,
காரின் பால் மின்னின் மின்னும் கனக ஆலயமும் கொண்டேன்;
பாரின் பால் இன்று என் ஆண்மை, பகை இலா குறையக் கண்டேன்.

     "ஒருவன் எனப்படும் கடவுளே எனக்குப் பகை செய்து நின்றாலும்,
நான் உலகத்தின் மீது வெற்றி கொண்டேன்; சீரான முறையில் மக்களின்
வணக்கம் கொண்டேன்; அழகிய மணிகள் பதித்த கோபுர உச்சியும்
கொண்டு, கரு மேகத்தில் தோன்றும் மின்னல் போல் மின்னும் பொற்
கோவிலும் கொண்டேன்; இன்று இவ்வுலகில் என் ஆண்மை, தெரியக்கூடிய
பகை ஒன்றும் இல்லாமலே குறையக் கண்டேன்.