12 |
கதிருண்ட
மணியிற் சீர்த்துக் களியுண்ட வெசித்து நாட்டி
லெதிருண்ட பகையொன் றின்றி யியலுண்டாண் டொருவ
னின்றேன்
முதிருண்ட விறைவ ராக, முயலுண்ட வணக்கங் கொண்ட
பொதிருண்ட வெனது சேனை பொருக்கென விரியக் கண்டேன். |
|
"கதிர் உண்ட
மணியின் சீர்த்துக் களி உண்ட எசித்து நாட்டில்,
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி, இயல் உண்டு ஆண்டு, ஒருவன்
நின்றேன்;
முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கு என இரியக் கண்டேன். |
"கதிர் வீசும்
மணி போல் சிறந்து களிப்புடன் வாழ்ந்த எசித்து
நாட்டில், எனக்கு எதிர்ப்பட்ட பகை ஒன்றும் இல்லாமல், இயல்பான
முறையில் ஆண்டு, நான் ஒருவனே தலைவனாய் இதுவரை நின்றேன்;
இப்பொழுதோ, பழமை வாய்ந்த தேவர்களாக மதித்து, மக்கள் முயன்று
செய்த வணக்கத்தைப் பெற்றுக் கொண்டிருந்த எனது திரண்ட சேனை
பொருக்கெனத் தோற்றோடக் கண்டேன்.
13 |
கார்தவழ்
வரைக டோறுங் கடிமலர்ப் பொழில்க டோறு
மேர்தவழ் புரங்க டோறு மெண்ணரு மிடங்க டோறுஞ்
சீர்தவழ் சிகரத் தோங்கிச் சிறந்தவா லயங்கள் யாவும்
போர்தவழ் களங்க டூவும் பூழியென் றாகக் கண்டேன். |
|
"கார் தவழ்
வரைகள் தோறும், கடி மலர்ப் பொழில்கள் தோறும்,
ஏர் தவழ் புரங்கள் தோறும், எண்ண அரும் இடங்கள் தோறும்,
சீர் தவழ் சிகரத்து ஓங்கிச் சிறந்த ஆலயங்கள் யாவும்,
போர் தவழ் களங்கள் தூவும் பூமி என்று ஆகக் கண்டேன். |
|