|
| 47 |
மரங்கொடு
கதஞ்சால் மருட்டிய மனத்தில் வருஞ்சிதை
வுணர்கிலாக் கொடியோ
னறங்கொடு புக்க யூதரைத் தடுப்ப வையெனத் தானையுந்
தானும்
புறங்கொடு பிரிந்த புணரிசெய் வழியே புக்குறீஇக் கடனடு
வடைந்தான்
றிறங்கொடு சினமு மாசையும் பெருகச் சேரிழி வறிகுவ
ரெவரோ. |
| |
"மறம் கொடு,
கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு
உணர்கிலாக் கொடியோன்,
அறம் கொடு புக்க யூதரைத் தடுப்ப, ஐ எனத் தானையும் தானும்,
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே, புக்கு உறீஇக் கடல் நடு
அடைந்தான்;
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக, சேர் இழிவு அறிகுவர்
எவரோ? |
"பாவத்தை
உள்ளே கொண்டிருந்து, சினம் தன்னை மிகுதியாக
மயக்கிய மனத்தால் தனக்கு வரும் கேட்டை உணர இயலாது போன
அக்கொடிய மன்னன், அறத்தைக் கொண்டிருந்து தம் வழியே செல்லப்
புகுந்த யூதரைத் தடுக்கும் பொருட்டு, மோயிசனின் பிரம்புக்குப்
புறங்கொடுத்துப் பிரிந்த கடல் அமைத்த வழியே தன் படையும் தானுமாக
விரைந்து புகுந்து சென்று கடலின் நடுவிடத்தை அடைந்தான்; தன்
திறத்தை நம்பிக்கொண்டு, சினமும் ஆசையும் பெருகக் காரியம்
செய்வதனால், ஒருவனுக்கு வந்து சேரும் இழிவை அறிபவர் யாரும்
உண்டோ?
எசித்துப்
படையின் அழிவு
-மாங்கனி,
-மாங்கனி, -மாங்கனி, புளிமா
| 48 |
நெடுமாகட
னிகர்மாபடை யுறிமாகட னெறியே
நடுமாகட லடைகாலையி னமையாள்பவ னவில்சொல்
லொடுமாகடல் மிசைவானவ னருவாயின வொருவன்
வடுமாகட லெனுதானையை மதியாவதை வகுத்தான். |
|