"நெடுமா கடல்
நிகர் மா படை, உறி மா கடல் நெறியே,
நடுமா கடல் அடை காலையில், நமை ஆள்பவன்
நவில்
சொல்-
லொடு, மா கடல் மிசை, வானவன் அரு ஆயின ஒருவன்,
வடு மா கடல் எனு தானையை மதியா வதை வகுத்தான். |
"நெடிய
பெரிய கடல் போன்ற எசித்தியர் பெரும் படை, பெரிய
கடலின் இடையே அமைந்து கிடந்த வழியை அடைந்து, பெரிய கடலின்
நடுவிடத்தை அடைந்தது. அப்போது, நம்மை ஆண்டு நடத்தும்
ஆண்டவன் சொல்லிய சொற்படி, அப்பெருங் கடலின்மீது, அருவமான
வானவன் ஒருவன், அதன் பாவம் பெருங் கடலுக்கு ஒப்பானது என்று
சொல்லத் தக்க அப்படையை மதிக்க முடியாத வதைக்கு உள்ளாக்கினான்.
உறி-'உறு'
என்ற பகுதியின் இறந்த கால வினையெச்ச அளபெடை
வடிவமாகிய 'உறீஇ' என்பது, ஓசை நீளாமைப் பொருட்டு, உறி என நின்றது;
'உற்று' என்பது பொருள். அருவம்-உருவமின்மை.
| 49 |
உரமற்றனர்
கவசத்தொடு முறழற்றன வுழவர்
சரமற்றனர் தருகத்தொடு சமமற்றன சமிதக்
கரமற்றனர் கருவிக்கொடு கழலற்றனர் கவிழச்
சிரமற்றனர் படைவிட்டெதிர் செருவுற்றனர்த்
தெரியார். |
| |
"உரம் அற்றனர்
கவசத்தொடும், உறழ் அற்றன உழவர்,
சரம் அற்றனர் தருகத்தொடு, சமம் அற்றன சமிதக்
கரம் அற்றனர், கருவிக் கொடு கழல் அற்றனர், கவிழச்
சிரம் அற்றனர், படை விட்டு எதிர் செரு உற்றனர்த்
தெரியார். |
"நிகரற்ற
அப்படையுழவர், படைக்கலன் ஏவித் தம் எதிரே போர்
தொடுத்தவரை யாரென்று தெரிந்து கொள்ள இயலாதவராய், தாம்
அணிந்திருந்த கவசத்தோடு மார்பையும் இழந்தனர்; வில்லோடு
அம்புகளையும் இழந்தனர்; ஒப்பற்ற போருக்குரிய கைகளையும் இழந்தனர்;
போர்க் கருவிகளால் வெட்டுண்டு கால்களையும் இழந்தனர்; கவிழ்ந்து
விழும்போதே தலைகளையும் இழந்தனர்.
'உழவர்'
ஏருழவர்க்கும் போருழவர்க்கும் பொதுப் பெயர். 'கழல்'
ஆகுபெயராகக் காலைக் குறித்தது.
|