பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்50

                  50
கோலில்லன புதையோடுள குதையில்லன கொடிய
வேலில்லன வளையோடிரு மழுவில்லன விரிநீண்
டோலில்லன வசியோடுயர் கதையில்லன சுளிவிற்
காலில்லன வடமோடொரு கடையில்லென மடிவார்.
 
"கோல் இல்லன, புதையோடு உள குதை இல்லன, கொடிய
வேல் இல்லன, வளையோடு இரு மழு இல்லன, விரி நீள்
தோல் இல்லன, வசியோடு உயர் கதை இல்லன, சுளி வில்
கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார்.

     "கையிற் கொண்டிருந்த அம்புகள் இல்லாமலும், தூணியோடு கூடிய
அம்புகள் இல்லாமலும், கொடிய வேல்கள் இல்லாமலும், சக்கராயுதத்தோடு
பெரிய மழுவாயுதம் இல்லாமலும், விரிந்து நீண்ட கேடயம் இல்லாமலும்,
வாளோடு உயர்ந்த தண்டாயுதம் இல்லாமலும், நாணோடு சினந்த வில்லின்
கால் இல்லாமலும் அவ்வீரர் ஒரு முடிவில்லாத எண்ணிக்கையாக மடிவர்.

     அவ்வீரர் கொண்டிருந்த அம்பு முதலியனவெல்லாம் அவ்வானவன்
செயலால் மாயமாய் மறைந்தன என அறிக.

                   51
உருள்பூட்டிய நெடுமச்சில வுருள்காலில வுகளி
மருள்பூட்டிய பரிமாவில வருபாகரு மிலமேற்
பொருள்பூட்டிய வுயர்கூம்பில பொலி நீண்கொடி
                                யிலபொற்
றெருள்பூட்டிய விரிபாரில சிதை தேர்பல பலவே.
 
"உருள் பூட்டிய நெடும் அச்சு இல, உருள் கால் இல, உகளி
மருள் பூட்டிய பரி மா இல, வரு பாகரும் இல, மேல்
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல, பொலி நீள் கொடி
                                    இலபொன்
தெருள் பூட்டிய விரி பார் இல சிதை தேர் பல பலவே.

     "உருளையைப் பூட்டிய நெடிய அச்சு இல்லாமலும், உருள்வதற்குரிய
உருளை இல்லாமலும், குதித்து மருள் கொண்ட குதிரை இல்லாமலும்,
நடத்தி வரும் பாகரும் இல்லாமலும், மேலே பொன்னால் செய்து பூட்டிய
உயரமான கூம்பு இல்லாமலும், பொலிவு கொண்ட நீண்ட கொடி
இல்லாமலும், பொன்