|
தகட்டால் விளக்கமுற
அமைத்த விரிந்த இடப்பரப்பு இல்லாமலுமாகச்
சிதைந்த தேர்கள் பற்பலவாகும்.
பரி மா - குதிரையாகிய
விலங்கு; குதிரை.
| 52 |
பிரிவார்தமி
னெரிவார்கறை பிளிர்வார்வதை பெறுவார்
முரிவாரலை புகுவாருள முனிவார்துயர் முதிர்வா
ரெரிவாருடல் கரிவாரிறந் திழிவாரிடை யிடையே
யொருவாளியெய் யருவாயின வொருவானவ னுரனால். |
| |
"பிரிவார்,
தமின் எரிவார், கறை பிளிர்வார், வதை பெறுவார்,
முரிவார், அலை புகுவார், உளம் முனிவார். துயர் முதிர்வார்.
எரிவார், உடல் கரிவார், இறந்து இழிவார், இடை இடையே
ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால். |
"இடையிடையே
ஓர் அம்பை எய்த அருவமான ஒரு வானவனின்
வல்லமையால் அவ்வெசித்து வீரர் தம்முள் பிரிவர்; தமக்குள் சினந்து
கொள்வர்; குருதி கொட்டுவர்; வதை பெறுவர்; முறிந்து ஓடுவர்;
அலைக்குள் புகுவர்; உள்ளத்தில் வெறுப்புக் கொள்வர்; துயரம் முதிர்ந்து
நிற்பர்; எரிவர்; உடல் கரிவர்; இறந்து சாய்வர்.
| 53 |
வலமாயினு
மிடமாயினும் வருவாளிக ளளவுண்
டிலதாயினும் வருவாளிகள் படுமல்லது மிலையால்
பலவாளியி லொருவாளியும் பறிப்பாரில துயிருண்
டலதாறுயி ருணுமோர்சர மலதெல்லையு மிலையே. |
| |
"வலம் ஆயினும்
இடம் ஆயினும் வரு வாளிகள், அளவு
உண்டு
இலது ஆயினும், வரு வாளிகள் படும் அல்லதும் இலை
ஆல்;
பல வாளியில் ஒரு வாளியும் பறிப்பார் இலது, உயிர்
உண்டு
அலது, ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது, எல்லையும்
இலையே. |
|