|
"வலப்புறமாயினும்
இடப்புறமாயினும் வந்து பாயும் அம்புகள்,
அளவு உண்டென்பது இல்லாதது மட்டுமன்றி, அவ்வாறு வரும் அம்புகள்
மேலே தைக்குமென்பதே அல்லாமல், தைக்காது போதல் என்பது இல்லை;
பல அம்புகளில் ஓர் அம்பையேனும் தடுத்துப் பறிப்பவர் இல்லாதபடி,
ஒவ்வோர் அம்பும் பகைவர் உயிரை உண்பது மட்டுமன்றி, ஓர் அம்பு
ஆறு உயிர்களை உண்ணும் என்பதும் அல்லாமல், அவ்வம்புகளுக்கு
எண்ணிக்கை வரம்பும் இல்லை.
| 54 |
அழலக்குய
வழலக்கரி யழலந்பரி யயலோ
டழலக்கதை யழலத்தனு வழலச்சர மசியோ
டழலக்கிடு கழலப்புதை யழலப்படை யெவையு
மழலக்குடை யழலக்கொடி யழலத்திரம் விடவே. |
| |
"அழலக் குயவு,
அழலக் கரி, அழலப் பரி, அயிலோடு
அழலக் கதை, அழலத் தனு, அழலச் சரம், அசியோடு
அழலக் கிடுகு, அழலப் புதை, அழலப் படை எவையும்,
அழலக் குடை, அழலக் கொடி, அழல் அத்திரம் விடவே. |
"அவ்வானவன்
நெருப்பம்பு ஒன்றை எசித்தியர் மீது ஏவி விடவே,
தேர்கள் எரியவும், யானைகள் எரியவும், குதிரைகள் எரியவும்,
வேலாயுதத்தோடு கதாயுதங்கள் எரியவும், வில்லுகள் எரியவும், அம்புகள்
எரியவும், வாளோடு கேடயங்கள் எரியவும், தூணிகள் எரியவும், காலாள்
உட்படப் படையிலுள்ள யாவும் எரியவும், குடைகள் எரியவும், கொடிகள்
எரியவும் எல்லாம் வெந்தன.
'எல்லாம் வெந்தன'
என முடிக்குஞ் சொற்கள் விரித்து
உரைக்கப்பட்டன.
| 55 |
அழிதாரொடு
கடலாழியி னடிவீழ்வன வுயர்தே
ரொழிபாயொடு கவிழ்கின்றன வுருவொத்தன மதமே
கழிமால்கரி கழறிக்குளிர் கடலுட்புகல் கதிரோ
னெழில்வானுற வலைபுக்கன விருளொத்தன வெனவே. |
|