|
"அழி
தாரொடு கடல் ஆழியின் அடி வீழ்வன உயர் தேர்,
ஒழி பாயொடு கவிழ்கின்றன உரு ஒத்தன. மதமே
கழி மால் கரி கழறிக் குளிர் கடலுள் புகல், கதிரோன்
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே. |
"உயரமான தேர்கள்
அழிந்த கொடியோடு கடலின் ஆழத்து
அடியில் விழும் தோற்றம், ஒழிந்த பாயோடு கவிழ்கின்ற கப்பல்களின்
உருவை ஒத்திருந்தன. மதத்தால் மிக்க மயக்கங் கொண்ட யானைகள்
அலறிக் கொண்டு குளிர்ந்த கடலுள் புகுந்து மறையும் தோற்றம், ஆதவன்
அழகிய வானத்தில் எழுந்து வரவே இருளெல்லாம் கடலுள் புகுந்த
தோற்றத்தை ஒத்தது என்னுமாறு அமைந்தது.
'அமைந்தது' என
ஒரு சொல் வருவித்து உரைக்கப்பட்டது.
'கவிழ்கின்றன' என்ற சொல், 'பாய்' என்ற சொல்லின் ஆற்றலால்
கப்பகளைக் குறிப்பாய் உணர்த்திற்று. அழிந்த கொடி, ஒழிந்த பாய்
என்பவற்றை, கொடி அழிந்து, பாய் ஒழிந்து எனப் பொருள் கருதுக.
| 56 |
முடிவானுறு மிரதத்துளர்
சிரமற்றுகு முடிகள்
வடிவாளியொ டுரமற்றுகும் வடிவுற்றணி மணிக
ளடியோடிரு கரமற்றுகு மழகுற்றவி ரணிகள்
கடிதாயுல கொழநாளுகு கணமொத்தன வெனவே. |
| |
"முடி வான் உறும்
இரதத்து உளர் சிரம் அற்று உகும்
முடிகள்,
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி
மணிகள்,
அடியோடு இரு கரம் அற்று உகும் அழகு உற்று அவிர் அணிகள்,
கடிதாய் உலகு ஒழி நாள் உகு கணம் ஒத்தன எனவே. |
"வானத்தைத்
தொடும் உச்சியை உடைய தேர்களில் உள்ளவர்களின்
தலைகள் அறுந்து சிதறும் முடிகளும், கூர்மையான அம்பினால் மார்புகள்
அறுந்து சிதறும் அழகிய வடிவம் அமைந்த அணிகளில் உள்ள மணிகளும்,
கால்களோடு இரு கைகளும் அறுந்து சிதறும் அழகு பொருந்தி ஒளிரும்
அணிகளும், கடுமையாய் உலகம் முடியும் நாளில் சிதறி விழும்
விண்மீன்களை ஒத்தன என்னுமாறு தோன்றும்.
|