பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்54

     'தோன்றும்' என்ற சொல் வருவிக்கப்பட்டது. உற்ற + அணி
'உற்றவணி' என வேண்டியது, 'உற்றணி' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.


                   57
காராரொலி கடலாரொலி கறைபாயொலி கடிதூர்
தேராரொலி கரியாரொலி பரியாரொலி சிதறும்
போராரொலி முரசாரொலி புகைவாரொலி
                              புரைசெய்
நேராரொலி மடிவாரொலி நிறைபாரொலி நிகரா.
 
"கார் ஆர் ஒலி, கடல் ஆர் ஒலி, கறை பாய் ஒலி,
                                கடிது ஊர்
தேர் ஆர் ஒலி, கரி ஆர் ஒலி, பரி ஆர் ஒலி, சிதறும்
போரார் ஒலி, முரசு ஆர் ஒலி, புகைவார் ஒலி,
                                புரை செய்
நேரார் ஒலி, மடிவார் ஒலி, நிறை பார் ஒலி நிகரா.

     "மேலே மேகங்கள் முழங்கும் ஒலியும், இரு பக்கத்தும் கடல்
முழங்கும் ஒலியும், குருதி பாய்ந்தோடும் ஒலியும், விரைந்து செல்லும்
தேர்கள் முழங்கும் ஒலியும், யானைகள் முழங்கும் ஒலியும், குதிரைகள்
முழங்கும் ஒலியும், சிதறி ஓடும் போர் வீரர் ஒலியும், முரசுகள் முழங்கும்
ஒலியும், சினங் கொள்பவர் ஒலியும், பாவத்தையே செய்யும் பகைவர்
ஒலியும், இறப்பவர்தம் ஒலியும் ஒன்று கூடுகையில், உலகமெங்கும்
நிறைந்துள்ள ஒலிகள் யாவும் ஒன்று கூடினாலும் ஒப்பாக மாட்டா.

                58
மாறாமத கரிபட்டன வதைபட்டன வயமா
வேறாயுரு ளழிபட்டன வழிபட்டன மிளிர்தேர்
கூறாயுடல் குறைபட்டன குறைபட்டன குருதி
யாறாயலை கிழிபட்டென வதிர்பட்டுறு மகடே.
 
"மாறா மத கரி பட்டன; வதை பட்டன வயமா;
வேறாய் உருள் அழிபட்டன; அழிபட்டன மிளிர் தேர்;
கூறாய் உடல் குறைபட்டன; குறைபட்டன குருதி
ஆறாய், அலை கிழிபட்டு என அதிர்பட்டு, உறும்
                                    அகடே.

     "மதம் மாறாத யானைகள் மடிந்தன; வலிமை வாய்ந்த குதிரைகள்
வதைக்கப்பட்டன; உருளைகள் தேரினின்று வேறாய்ப் பிரிந்து அழிந்தன;
ஒளிரும் தேர்கள் அழிந்தன; வீரர் தம் உடல்கள் கூறு கூறாய்த்
துண்டிக்கப்பட்டன; துண்டிக்கப்பட்ட உடலினின்று பாய்ந்த குருதி ஆறாய்ப்