பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்55

பெருகி, கடலே கிழிக்கப் பட்டதுபோல அதிருமாறு ஓடி, அதன்
உள்ளிடத்தைச் சென்றடையும்.


                  59
செப்பாறில தடறானைக டிரள்மாள்தலி றிரளுந்
துப்பாறென வுதிரத்திரை தொடராழியின் விரவ
வப்பாறிவ ழலைசேப்பலி னதுசெங்கட லெனவே
யொப்பாறில கதையாவரு முணரப்பின ருரைத்தார்.
 
செப்பு ஆறு இலது அடல் தானைகள் திரள் மாள்தலில்,
                                       திரளும்
துப்பு ஆறு என உதிரத் திரை தொடர் ஆழியின் விரவ,
அப்பால் திவழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே,
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணரப் பினர் உரைத்தார்.

     "சொல்லும் தன்மைக்கு அடங்காமல் வலிமை வாய்ந்த படைகளின்
திரள் மடிதலினால், திரளும் பவள ஆறு போல அப் படைகளின்
உதிரமாகிய கடல் தொடர்ந்து போய்க் கடலில் கலக்கவே,
அப்பக்கமெல்லாம் தெளிந்த கடல் செந்நிறமாயின மையால் அது செங்கடல்
ஆயிற்று என, ஒப்பற்ற நிகழ்ச்சியை யாவரும் உணருமாறு பிற்காலத்தில்
மக்கள் கூறத் தொடங்கினர்.

                60
நானேருள திசையெங்கணு நானாபடை நணுக
மேனேருள முகிலின்றுளி மேனேர்கணை விழுகக்
கானேருள படைகண்டிலர் காணார்விடு கரமும்
மானேருள மழிவஞ்சகர் மானாதுள மருள்வார்.
 
நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக,
மேல் நேர் உள முகிலின் துளி மேல் நேர் கணை விழுக,
கால் நேர் உள படை கண்டிலர் காணார் விடு கரமும்;
மான் நேர் உளம் அழி வஞ்சகர், மானாது உளம்
                                     மருள்வார்.

     "தமக்கு நேரே நான்காக உள்ள திசை எங்குமிருந்து பல வகை
ஆயுதங்கள் நெருங்கவும், தமக்கு நேர் மேலேயுள்ள மேகத்தின்
துளிகளினும் மிகுதியாக நேரே அம்புகள் பாய்ந்து விழவும், மான் போலத்
தம் உள்ளம்