|
நிலைகுலைந்த வஞ்சகராகிய
எசித்தியர் காலோடு தமக்கு நேரே உள்ள
படைவீரர் எவரையும் கண்டிலர்; அவற்றை ஏவிவிட்ட கைகளையும்
கண்டிலர். அதனால், ஒப்பற்ற விதமாய் உள்ளம் மருள்வர்.
| 61 |
முன்னேரினர்
பின்னேரினர் புடைநேரினர் முகிலி
னன்னேரின ரின்னேரின ரன்னேரின ரலைமே
லென்னேரின ரென்னேரின ரென்றேயவ ரெனினுங்
கொன்னேபடை கொண்டாருயிர் கொன்றான்கரங்
குறிப்பார். |
| |
முன் நேரினர்;
பின் நேரினர்; புடை நேரினர்; முகிலின்
அன்ன நேரினர்; இன்ன நேரினர்; அன்ன நேரினர்; அலை
மேல்,
என் நேரினர்; என் நேரினர்!' என்றே அவர் எனினும்
கொன்னே, படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம்,
குறிப்பார்.
|
இவ்வாறு மயங்கிய
நிலையில், 'நம் பகைவர் இதோ, முன்னே
நின்றனர்; அதோ, பின்னே நின்றனர்; பக்கத்தே நின்றனர்; மேகத்தினில்
அவ்விடத்து நின்றனர்; இவ்விடம் நின்றனர்; இல்லை, அவ்விடமே நின்றனர்;
கடலுக்கு மேல் எனக்கு நேராகவே நின்றனர்; இல்லை எனக்கு நேராகவே
நின்றனர்!' என்றெல்லாம் வீரர்கள் தமக்குள் பலவாறு கூறுவர். எனினும்,
தம் அருமையான உயிரைக் கொன்று கொண்டிருந்த அவ் வானவனின்
கையையே தம் ஆயுதங்களால் வீணாகவே சுட்டிக் காட்ட முற்படுவர்.
இரண்டாம் அடியில்,
அன்ன, இன்ன என்ற சொற்கள், அன்ன இடம்,
இன்ன இடம் என்ற பொருளில், கடை குறைந்து, அன், இன் என நின்றன.
| 62 |
கட்டுற்றெழு
கனறுற்றிய கதமுற்றிய கயவ
ருட்டுற்றெழு பகையொத்தன வுறவிட்டிசை யுயர்நேர்
பட்டுற்றெழு முகிலொத்தெழு பகழித்திரள் விடுவார்
விட்டுற்றெழு சரம்விட்டனர் மிசைபட்டுரு விடுமால். |
|