|
கண் துற்று எழு
கனல் துற்றிய கதம் முற்றிய கயவர்,
உள் துற்று எழு பகை ஒத்தன, உற, விண் திசை உயர் நேர்
பட்டு உற்று எழு முகில் ஒத்து, எழு பகழித் திரள் விடுவார்.
விட்டு, உற்று எழு சரம் விட்டனர் மிசை பட்டு உருவிடும் ஆல். |
"தம் கண்ணில்
செறிந்து எழும் நெருப்புக்கு ஒத்தவாறு சினம்
முதிர்ந்த அக்கயவர்கள், தம் உள்ளத்தில் செறிந்து எழும் பகைக்கு
ஒத்தவாறு, தாம் தாம் கருதிய அவ்விடத்துச் சென்று சேருமாறு, வானத்தின்
மீது உயரமாய் நேரே பொருந்தி நின்று எழுந்து பொழியும் மேகம் போன்று,
பாய்ந்து செல்லும் அம்புகளைத் திரளாக ஏவி விடுவர். அவ்வாறு ஏவிவிட்டு,
பாய்ந்து செல்லும் அம்புகள், திசை திரும்பி, ஏவிவிட்டவர் மேலேயே
ஊடுருவும்.
| 63 |
அண்டத்துய
ருலகாளிறை யவனோடெவர் பொருவார்
மண்டத்துயர் வலியற்றன மெனமற்றவர் மதமா
கண்டத்துயர் பொலிவேந்தொடு கடிதொடிய கடையிற்
சண்டத்துயர் கரையூதர்கள் தனியுற்றன ரொருங்கே. |
| |
அண்டத்து உயர்
உலகு ஆள் இறையவனோடு எவர்
பொருவார்?
மண்டத் துயர், வலி அற்றனம்!' என, மற்று அவர் மத மா
கண்டத்து உயர் பொலி வேந்தோடு கடிது ஓடிய கடையில்,
சண்டத்து உயர் கரை யூதர்கள் தனி உற்றனர் ஒருங்கே. |
"உயர்ந்த உலகமாகிய
வானத்தில் வீற்றிருந்து ஆளும்
ஆண்டவனோடு போரிடும் ஆற்றல் உடையார் எவர்? துயரம் பெருக,
நாம் வலிமை இழந்தோம்!' என, அவ்வெசித்தியர் மத யானையின் கழுத்தில்
உயர்ந்து பொலிவுடன் விளங்கிய மன்னனோடு விரைந்து ஓடிய வேளையில்,
யூதர்கள் ஒருங்கே விரைந்து சென்று அக்கடலின் உயர்ந்த மறு கரையில்
தனிச் சிறப்போடு அடைந்தனர்.
'மற்று'
அசை நிலை. மத மா - மதங்கொண்ட விலங்கு : யானை.
|