பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்58

                  யூதர் வெற்றிக் களிப்பு

     -மா, -மா, -மா, -மா, -மா, -மா

                      64
கரைமே லிவர்சென் றனரென் றுகதத் திறையோன்
                                      கடற்றெண்
டிரைமே லடற்சூ ரலைநீட் டெனநீட் டியசீர் திரண்ட
வரைமேல் வரைவீழ்ந் தெனவாங் கலைவீழ்ந் தவர்மேற்
                                      கவிழ்ந்து
குரைமே லெழவுட் குளித்தாழ்ந் துகொடும் பகைவர் மடிந்தார்.
 
"கரை மேல் இவர் சென்றனர் என்று, கதத்து இறையோன்,  
                                        'கடல் தெண்
திரை மேல் அடல் சூரலை நீட்டு!' என, நீட்டிய சீர், திரண்ட
வரை மேல் வரை வீழ்ந்து என, ஆங்கு அலை, வீழ்ந்து அவர்                                        மேல் கவிழ்ந்து,
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து, கொடும் பகைவர்,                                        மடிந்தார்

     "எசித்தியர்மீது சினங்கொண்ட ஆண்டவன், செங்கடலின்
மறுகரையில் இவ்யூதர்கள் சென்று சேர்ந்தனரென்று கண்டதும், மோயிசனை
நோக்கி, 'கடலினது தெளிந்த திரையின்மீது வல்லமை வாய்ந்த பிரம்பை
நீட்டு!' என்றார். அவ்வாறு நீட்டிய சீரால் அங்கு இரு பக்கமும் பிரிந்து
கவர் போல் நின்ற கடல், திரண்ட மலையின் மேல் மலை சரிந்து விழுந்தது
போல் அங்கு வீழ்ந்து கிடந்த எசித்தியர் மேல் கவிழ்ந்து மூடியது.
அக்கொடிய பகைவர், மேலே நுரை எழுந்து பரவக் கடலினுள் மூழ்கி
அமிழ்ந்து இறந்தனர்.

                     65
கடைநாள் கடனீர் குடைந்து கழறிப் பொங்குங் கதம்போ
லுடைமால் கரிகள் பரிக ளுருடேருழவ ருளமற்
படைநால் வகையுங் குடையப் படமேற் படக்கீழ்ப் படவே
புடைவாங் கலையோ டலையப் பொலியார்ப் புலகிற் பொருவா.
 
"கடை நாள் கடல் நீர் குடைந்து கழறிப் பொங்கும் கதம் போல்,
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மல்
படை நால் வகையும் குடையப்பட, மேல்பட கீழ்ப் படவே,
புடை வாங்கு அலையோடு அலைய, பொலி ஆர்ப்பு உலகில்
                                           பொருவா.