"'நரம் தரும்
குலைவின் நைந்து, நாடு ஒழிந்து ஓடினாரை
வரம் தரும் தேவராக வணங்கவோ?' என்ன, யாரும்,
சரம் தரும் பூவும் சாத்தா, சாந்தமும் புகையும் காட்டா,
பரம் தரும் கமழ் நீர் ஆட்டா, பணிதல் ஒன்றினையும்
காணேன். |
"இங்குள்ள யாவரும்,
'அச்சம் தரும் குலைவினால் நைந்து,
இந்நாட்டை விட்டே ஓடிப் போனவர்களை இனிமேலும் வரம் தரக்கூடிய
தேவர்களாக மதித்து வணங்க வேண்டுமோ!' என்று கூறி, சரமாகத்
தொடுக்கும் பூமாலை சாத்தாமலும், சந்தனமும் தூபமும் காட்டாமலும்,
தூய்மை தரும் நறுமண நீரால் முழுக் காட்டாமலும் இருப்பதேயன்றி,
வணங்குதல் ஒன்றையும் காணேன்.
16 |
பணிமுகத்
துயிர்கட் கேடாய்ப் பண்டுளி யெருமு போற்றி
யணிமுகத் தலர்ந்த சாகி யரிதெலாப் பிணிக டீர்ப்ப
மணிமுகத் திறைவன் றந்த வரத்துறைந் தனபே யோடித்
துணிமுகத் திவையோர்ந் தன்னார் தொழுதல்விட் டிருப்பக்
கண்டேன் |
|
பணி முகத்து உயிர்கட்
கேடாய், பண்டு உளி எருமு போற்றி
அணி முகத்து அலர்ந்த சாகி, அரிது எலாப் பிணிகள் தீர்ப்ப,
மணி முகத்து இறைவன் தந்த வரத்து, உறைந்தன பேய் ஓடி,
துணி முகத்து இவை ஓர்ந்து அன்னார் தொழுதல் விட்டு இருப்பக்
கண்டேன் |
"தன்னைத் தெய்வமாக
வணங்கும் தன்மையால் உயிர்களுக்குப்
பாவமாகிய கேடு பொருந்தும்படி, பண்டை நாளிலெல்லாம் ஏருமுமாபுரம்
வணங்க, அழகிய முகத்தோடு பூத்துப் பொலிந்த அம்மரமே, இப்பொழுது,
மணிபோன்று ஆண்டவன் தனக்குத் தந்த வரத்தால் தீர்ப்பதற்கு அரிய
எல்லாப் பிணிகளையும் தீர்த்து வருகிறது; அதனில் தங்கியிருந்த பேயும்
ஒடிப்போயிற்று. அந்நகர மக்கள் துணிந்த தன்மையாய் இவற்றையெல்லாம்
ஆராய்ந்து உணர்ந்து, அதனைத் தொழுதலைக் கைவிட்டிருக்கவும்
கண்டேன்.
|