உயிர்கள்
+ கேடாய் என்பது, உயிர்கட்குக் கேடாய் என்ற
பொருளில், 'உயிர்கட் கேடாய்' என விகாரமாயிற்று. எருமு - ஏருமு
(22 : 17) என்பதன் குறுக்கல் விகாரம்,
17 |
இத்திறத்
தெவணத் தாரு மெனைநகைத் திகழ்ச்சி கூற
மைத்திறத் துயரென் கோன்மை வசையினோ டழியக் கண்டே
யத்திறத் தனைத்து மாக்கி யடும்பகை யணுகிப் பார்க்கின்
மெய்த்திறத் துயரென் காட்சி மெலிதர வொன்றுங் காணேன். |
|
"இத் திறத்து,
எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற,
மைத் திறத்து உயர் என் கோன்மை வசையினோடு அழியக் கண்டே,
அத் திறத்து அனைத்தும் ஆக்கி அடும் பகை அணுகிப் பார்க்கின்,
மெய்த் திறத்து உயர் என் காட்சி மெலிதர, ஒன்றும் காணேன். |
"இவ்வாறாக,
எவ்விடத்தாரும் என்னை நகைத்து இகழ்ச்சி கூறவே,
மயக்கும் திறத்தில் உயர்ந்த எனது ஆட்சி வசையோடு அழியக் கண்டு,
அவ்விதத்து அனைத்தையும் ஆக்கி வாட்டும் பகை எதுவென்று அணுகிப்
பார்க்க முற்படுகையில், மெய்யைக் காணும் திறத்தில் உயர்ந்த என் அறிவும்
மெலியுமாறு, அத்தகைய பகையாக ஒன்றும் காண இயலாதவனானேன்.
18 |
காட்சியா
றெளித்து பார்க்கிற் காரண மியாதோ நாடி
மாட்சியா லுயரந் நாட்டில் வந்திரு யூதர்க் கண்ட
சூட்சியா னவமி தொன்றே துளங்கறத் துயர்ந்தோ ரேனும்
பூட்சியா லுளைந்தோ ராகிப் புரியுமொர் கரும முண்டோ. |
|
"காட்சியால்
தெளிந்து பார்க்கில், காரணம் யாதோ நாடி,
மாட்சியால் உயர் அந் நாட்டில், வந்த இரு யூதர்க் கண்ட
சூட்சியால், நவம் இது ஒன்றே; துளங்கு அறத்து
உயர்ந்தோரேனும்,
பூட்சியால் உளைந்தோர் ஆகி, புரியும் ஓர் கருமம் உண்டோ? |
|