பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்485

     "அவ்வாறான அறிவின் துணையால் தெளிந்து பார்க்கையில்,
மாண்பினால் உயர்ந்த அந்நாட்டில் யாதோ காரணம் பற்றி வந்து
சேர்ந்த யூதர் இருவரைக் கண்ட உணர்வின் அடிப்படையில், புதுமை
என்று கொள்ளத்தக்கது இது ஒன்றே; அவ்விருவரும் தம்மிடம் விளங்கும்
அறத்தால் உயர்ந்தோராகவே இருப்பினும், தாம் உடலால் மெலிந்தோராகக்
கொள்ள, அவர் செய்யக் கூடியக் காரியம் ஏதேனும் உண்டோ?

     காரணம் + யாதோ - காரணமியாதோ : மெய்முன் யகரப்
புணர்ச்சியின் இகரம் மிக்கது. வந்த+இது - 'வந்தவிரு' எனற் பாலது,
தொகுத்தல் விகாரமாக, 'வந்திரு' என நின்றது. "திருக்குமாரனை
அறியாமையால், அவனை எண்ணாமல், 'இரு யூதர்' என்றான் என்க"
என்பது பழையவுரை அடிக்குறிப்பு.

                     19
"நான்விளை வஞ்சத் தொல்கா நஞ்சென வின்பம் வெஃகா
வூன்விளை துயரிற் குன்றா வுரைவிளை புகழி னேரா
கான்விளை தவத்தி லொவ்வா காத்தமாண் பிருவ ரேனும்
வான் விளை பகைக்குந் தேவ வயத்தலா லஞ்சே னானே.
 
"நான் விளை வஞ்சத்து ஒல்கா, நஞ்சு என இன்பம் வெஃகா,
ஊன் விளை துயரின் குன்றா, உரை விளை புகழின் நேரா,
கான் விளை தவத்தில் ஒவ்வா காத்த மாண்பு இருவரேனும்,
வான் விளை பகைக்கும், தேவ வயத்து அலால், அஞ்சேன் நானே.

     "தெய்வ வல்லமை ஒன்றிற்கு மட்டுமே நான் அஞ்சுவதல்லாமல், நான்
விளைவிக்கும் தந்திரங்களுக்கு ஓடுங்காமலும், இன்பத்தை நஞ்சென மதித்து
விரும்பாமலும், ஊனுடலுக்கு விளையும் துன்பத்திடையே குழையாமலும்,
உரையால் விளையும் புகழை ஏற்காமலும், காட்டில் விளைவிக்கும் தவத்தில்
பிறர் எவரும் தமக்கு ஒப்பாகாமலும் தம்மைக் காத்துக்கொண்ட மாண்புமிக்க
அவ்விருவரேயாயினும், வானுலகத்தார் விளைவிக்கும் பகைக்கும் அஞ்சேன்.