கவலை கொண்டுள்ள
பேய்க்கரசனை நோக்கி, தானே தடவிக் கொடுத்த
அவன் அடிகளைப் போற்றி, நெருப்பைக் கக்கி, முதலில் பின்வருமாறு
சொல்லத் தொடங்கினான் :
'கடாவிய
அசனி அன்ன' என்பதனை, 'அசனி கடாவி அன்ன'
எனக் கொள்க. 'தடவிய' என்பது, எதுகைப் பொருட்டு, 'தடாவிய' என
நீட்டம் கொண்டது.
தேமா, தேமா,
கூவிளம், தேமா, புளிமாங்காய்
22 |
குய்யங்
கொண்டார் கண்டவை யெண்ணிக்
குறையெண்ணா
ரய்யங் கொண்டா லாரறி வெஞ்சி யரிதுய்வார்
மொய்யங் குண்டாய் வானிழி நாளின் முரிவென்னோ
வய்யங் கொண்டா ரேற்றிய கோலின் வலிகொண்டாய். |
|
"குய்யம் கொண்டார்,
கண்டவை எண்ணி, குறை எண்ணார்.
அய்யம் கொண்டால், ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார்.
மொய் அங்கு உண்டாய், வான் இழி நாளின் முரிவு என்னோ?
வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய். |
"தந்திரம் உடையோர்,
கண்டவற்றை ஆராய்ந்து பார்த்து, குறையே
தமக்கு நேர்ந்து முடிந்ததாகக் கருதமாட்டார். தம்மீது தாமே ஐயம்
கொண்டால், நிறை அறிவும் மெலிந்து போகவே, தப்பிப் பிழைப்பாராதல்
அரிது. அவ்வானுலகில் போர் ஏற்பட்டு, வானுலகினின்று இறங்கி விழுந்த நாளில் ஏற்பட்ட
கேடு என்ன? அதன் மூலம், இவ்வுலகிலுள்ளோரெல்லாம் போற்றிய ஆட்சியின் வலிமையே
பெற்றுக் கொண்டுள்ளாய்.
'கோல்' ஆட்சிக்கு
ஆகுபெயர். கண்டவை எண்ணலாவது, அவற்றை
ஆராய்ந்து களைய வழி நாடுதல். 'அய்யம்' 'ஐயம்' என்பதன் போலி,
'வய்யம்' 'வையம்' என்பதன் போலி.
23 |
மையின்
வாயா றம்மறி வெஞ்ச மயலுய்க்கு
மெய்யின் வாயா லீனம லிந்த வினைமாக்கள்
பொய்யின் வாயாற் பொங்கட லானாம் புரிகின்ற
மொய்யின் வாயா னிற்பவர் கொல்லோ
முரியாதார். |
|