பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்488

"மையின் வாயால் தம் அறிவு எஞ்ச, மயல் உய்க்கும்
மெய்யின் வாயால் ஈனம் மலிந்த வினை மாக்கள்,
பொய்யின் வாயால் பொங்கு அடலால் நாம் புரிகின்ற
மொய்யின் வாயால் நிற்பவர் கொல்லோ முரியா தார்?

     "இருளின் சார்பால் தம் அறிவு மயங்கி, மயக்கம் தரும் தம் உடலின்
தன்மையால் இழிவை மலிந்துள்ள செயலுக்குரிய மனிதர்கள், பொய்யின்
துணையாலும் பொங்கிய வலிமையாலும் நாம் செய்கின்ற போரின்கண்,
தோற்று ஓடாதவராய் நிற்கக் கூடியவர்களோ?

     'கொல்' அசைநிலை: 'முரியாதார் நிற்பவர் கொல்லோ?' என மாற்றிக்
கூட்டுக.

                     24
ஆய்ந்தாய்ந் தெல்லா நீயறி யாதொன் றறைவேனோ
மாய்ந்தான் மைந்த னென்றரி தையன் மனம் வாடக்
காய்ந்தார் துன்பந் தீர்ப்பம கன்றன் கவினொப்ப
வேய்ந்தான் வாய்ந்தோர் நல்லுரு வன்பின்
                              வினையாற்றான்.
 
"ஆய்ந்து ஆய்ந்து எல்லாம், நீ அறியாத ஒன்று அறைவேனோ?
மாய்ந்தான் மைந்தன் என்று, அரிது ஐயன் மனம் வாட,
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப, மகன் தன் கவின் ஒப்ப,
வேய்ந்தான், வாய்ந்த ஓர் நல் உரு, அன்பின் வினையால், தான்.

     "எல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்தும், நீ அறியாத ஒன்றை
நான் சொல்ல வல்லேனோ? தன் மகன் இறந்தானென்று ஒரு தந்தையின்
மனம் ஆற்றுவதற்கு அரிதாய் வாடவே, தன்னை வாட்டி நிறைந்து நின்ற
துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு, தன் மகனின் அழகுக்கு ஒப்பாக
அமைந்த ஒரு நல்ல உருவச் சிலையை, தன் அன்பின் செயலால், தானே
அமைத்து முடித்தான்.

     'அறியாதவொன்று', 'வாய்ந்தவோர்' என்பன, 'அறியாதொன்று',
'வாய்ந்தோர்' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டு நின்றன.

                     25
கைக்கண் டேவற் செய்பவர் தாதை கடிதுற்ற
மைக்கண் டுள்ளந் தேறுமெ னத்தாம் வழிபாடாய்ப்
பொய்க்கண் டேனும் பூவொடு வாசப் புகை சாத்தி
யைக்கொண் டோர்நற் றெய்வத மென்றா ரறிவற்றார்.