பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்489

"கைக் கண்டு ஏவல் செய்பவர், தாதை கடிது உற்ற
மைக் கண்டு, உள்ளம் தேறும் என, தாம் வழிபாடாய்,
பொய்க் கண்டேனும், பூவொடு வாசப் புகை சாத்தி,
'ஐக் கொண்ட ஓர் நல் தெய்வதம்!' என்றார்,
                                  அறிவு அற்றார்.

     "கைக் குறிப்பைக் கண்டு ஏவல் செய்பவர், அத் தந்தை மிகுதியாகக்
கொண்ட மயக்கத்தைக் கண்டு, இதனால் அவன் உள்ளம் தேறுமென்று
கருதி, தாம் அச்சிலைக்கு வழிபாடாக பலரோடு நறுமணப் புகையும் இட்டு,
அது பொய்யெனக் கண்டிருந்தும், அறிவற்றவராய், 'இது அழகு பொருந்திய
ஒரு நல்ல தெய்வம்!' என்று சொல்லத் தொடங்கினர்.

     சாத்துதல் பூவுக்கும், காட்டுதல் வாசப் புகைக்கும்
பொருந்துவனவாதலின், இரண்டிற்கும் பொருத்துமாறு 'இடுதல்' என்றும்
பொதுவினை கொள்க, கொண்ட + ஓர் - 'கொண்ட வோர்' எனற்பாலது,
'கொண்டோர்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று. 'கைக் கொண்டு'.
என்பதற்கு, 'கையூதியத்தைப்பற்றி' என்ற பழையவுரையும் பொருந்தும்.

                 26
செல்லுந் தன்மைத் தாயவை கேட்டுத் திருவல்லோன்
வெல்லுந் தன்மைத் தையனை யேத்த விரிபார்மேற்
சொல்லுந் தன்மைத் தர்ச்சனை விஞ்சத் துகளாக்க
மொல்லுந் தன்மைத் தோரிறை யோனை யொழிகின்றார்.
 
"செல்லும் தன்மைத்து, ஆயவை கேட்டுத் திரு வல்லோன்,
வெல்லும் தன்மைத்து, ஐயனை ஏத்த, விரி பார் மேல்
சொல்லும் தன்மைத்து அர்ச்சனை விஞ்ச, துகள் ஆக்கம்
ஒல்லும் தன்மைத்து, ஓர் இறையோனை ஒழிகின்றார்.

     "இவ்வாறு நடந்து வரும் முறையில், செல்வம் மிக்க ஒருவன்
நிகழ்ந்தவற்றைக் கேள்விப்பட்டு, தான் அதனை வெல்லும் வகையாக,
தன் தந்தையைத் தெய்வமாகப் போற்றுமாறு, விரிந்த மண்ணுலகமெல்லாம்
மேலாகப் பாராட்டிச் சொல்லும் தன்மையாக ஆராதனையில் மேலோங்கி
நின்றான். இவ்வாறாக, பாவம் என்னும் செல்வம் பொருந்துமாறு,
பெரும்பாலோர் ஒரே கடவுளை மறந்தொழிகின்றனர்.

                 27
எய்யா மாக்கட் டீயுற நானே யெளிதிவ்வாய்
மெய்யா நாதன் றன்னைம றுத்தே வினையுய்க்கும்
பொய்யா வஞ்சத் துய்த்தன பொய்யம் பலதேவர்
கொய்யா வண்ணத் தெங்கணு மேத்துங்
                              குழுகண்டாய்.