"எய்யா மாக்கள்
தீ உற, நானே எளிது இவ் வாய்
மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே, வினை உய்க்கும்
பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர்,
கொய்யா வண்ணத்து எங்கணும் ஏத்தும் குழு கண்டாய். |
"அறிவில்லாத
மனிதர் நரகத் தீயில் சென்று சேருமாறு, இவ்வழியில்
நானே எளிதாக மெய்யான ஆண்டவனை மறுத்து, காரியத்தைக் கொண்டு
செலுத்தும் தவறாத தந்திரத்தால் செலுத்திவிட்ட பல பொய்த் தேவர்களை,
களைய முடியாதவாறு எங்கும் வழிபடும் குழுக்களை நீயே கண்டுள்ளாய்.
மெய்க் கடவுளை
மெய்யங்கடவுள் என்பது போல், பொய்த்
தேவரைப் பொய்யந் தேவர் என்றார், இதில் அம் சாரியை,
28 |
ஊன்றோய்
மாக்கட் டங்குண மிஃதே லுளைவென்னோ
கான்றோய் பைம்பூஞ் சோலையெ சித்தார் கசடுற்று
வான்றோய் மின்போ லொல்குபு நின்றாள் வலியேத்த
நான்றோய் வஞ்சஞ் சால்பெனச் சொன்னா னவைமிக்கான். |
|
"ஊன் தோய்
மாக்கள் தம் குணம் இஃதேல், உளைவு என்னோ?
கான் தோய் பைம் பூஞ்சோலை எசித்தார் கசடு உற்று,
வான் தோய் மின் போல் ஒல்குபு, நின் தாள் வலி ஏத்த,
நான் தோய் வஞ்சம் சால்பு" எனச் சொன்னான் நவை மிக்கான். |
"ஊனுடலைச் சார்ந்து
ஒழுகும் மக்களின் குணம் இவ்வாறிருக்கையில்,
எல்லாம் கெட்டு விட்டதாகக் கருதி வருந்துதல் ஏன்? மணம் தோய்ந்த
பசுமையான பூஞ்சோலைகள் நிறைந்த எசித்து நாட்டார் பாவக் கசடு
கொண்டு, வானில் தோய்ந்த மின்னல் போல் ஒடுங்கி, உனது அடியின்
வல்லமையைப் போற்றுவதற்கு, நான் கொண்டுள்ள இத்தந்திரமே சாலச்
சிறந்தது" என்று பாவத்தில் மிக்கவனாகிய சிடாவியன் சொன்னான்.
'ஊன்
தோய்' என்றது, அறிவு தோயாமையைக் குறிப்பாய்ச் சுட்டுவது.
|