29 |
என்றா னன்னா
னென்றவை கேட்டா ரினிதென்றார்
வின்றா னென்பான் விஞ்சிய மாயை வினைவல்லா
னின்றான் முன்பா னென்றதி கழ்ந்து நிறைநக்குப்
பொன்றா வின்னா பூரண சேத்திப் புகலுற்றான். |
|
என்றான் அன்னான்,
என்றவை கேட்டார், இனிது என்றார்.
வின்றான் என்பான், விஞ்சிய மாயை வினை வல்லான்
நின்றான்; முன்பான் என்றது இகழ்ந்து, நிறை நக்கு,
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்தி, புகல் உற்றான்: |
அவன் அவ்வாறு
சொன்னான். சொன்னவற்றைக் கேட்டவர், அது
இனிய தென்று பாராட்டினர். யாவரையும் மாயச் செயலில் மிஞ்சிய வின்றான்
என்பவனும் அங்கு நின்றான்; முன்னவன் சொல்லியதை இகழ்ந்து, மிகவே
நகைத்து, அழியாத துன்பம் பூண்டு நின்ற பேயரசனைப் போற்றி,
பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
30 |
கார்ந டந்துளி
வாவியைக் காத்தபுள்
நீர கன்றுளி நிற்பது காண்பரோ
சீர டைந்துளி மானிடர் செய்யறஞ்
சூர டைந்துளி தோமொடு மாற்றுவார். |
|
"கார் நடந்த
உளி வாவியைக் காத்தபுள்,
நீர் அகன்ற உளி நிற்பது காண்பரோ?
சீர் அடைந்த உளி மானிடர் செய் அறம்,
சூர் அடைந்த உளி தோமொடு மாற்றுவார். |
"மழை பெய்து
நீர் நிறைந்த காலத்துத் தடாகத்தில் காத்திருந்த
பறவைகள், நீர் வற்றிய காலத்து அங்கு நிலை கொள்ளக் காண்பரோ?
அது போலவே, செல்வம் பெற்ற காலத்து மனிதர் செய்யும் தருமங்களை,
அது இல்லாமல் துன்பம் அடைந்த காலத்துத் தாம் செய்யும் பாவங்களால்
மாற்றிக் கெடுத்துக் கொள்வர்.
|