'அரோ' அசைநிலை.
தொடர்ந்து வரும் நிகழ்ச்சி பற்றிப் ப. ஏ.,
எண்ணாகமம், 21 : 4 - 9 காண்க.
33 |
ஓவி யேங்கியு
ளைந்திறை வேண்டினார்
மேவி வேண்டினர் மேவுகின் றாண்டகை
யேவி மோயிச னீண்டொரு பாந்தளைச்
சாவி லாம்படித் தாம்பிரத் தாக்கினான். |
|
"ஓவி ஏங்கி
உளைந்து இறை வேண்டினார்.
மேவி வேண்டினர் மேவுகின்ற ஆண்டகை
ஏவி, மோயிசன் ஈண்டு ஒரு பாந்தளை,
சாவு இல் ஆம்படி, தாம்பிரத்து ஆக்கினான். |
"அது கண்ட யூதர்
சோர்ந்து ஏங்கி வருந்தி இறைவனை வேண்டினர்.
தன்னைச் சார்ந்து வேண்டியவர்க்கு மேவி அருள் செய்கின்ற இயல்புள்ள
ஆண்டவன் ஏவலால், அவர்களுக்குச் சாவு நேராதபடி, மோயிசன்
விரைவாகச் செம்பினால் ஒரு பாம்பைச் செய்தான்.
34 |
ஆக்கு கின்றவ
ராவொரு கம்பமேற்
றூக்கு கின்றனன் றூக்கிய பாந்தளை
நோக்கு கின்றனர் நோயஃகி நஞ்சினை
நீக்கு கின்றுயிர் நீங்கில ருய்வரே. |
|
"ஆக்குகின்ற
அரா ஒரு கம்ப மேல்
தூக்குகின்றனன். தூக்கிய பாந்தளை
நோக்குகின்றனர் நோய் அஃகி, நஞ்சினை
நீக்குகின்று, உயிர் நீங்கிலர் உய்வரே. |
"அவ்வாறு தான்
ஆக்குகின்ற பாம்பை மோயிசன் ஒரு கம்பத்தின்
மேல் ஏற்றி வைக்கின்றான். ஏற்றி வைத்த அப் பாம்பை நோக்குகின்றவர்
பாம்பு கடித்த நோய் குறைந்து, நஞ்சை நீக்குகின்றவராய், உயிர் நீங்காமல்
பிழைப்பர்.
இது,
இறந்த கால நிகழ்ச்சியை நிகழ் கால வாய்பாட்டால் கூறியது,
|