பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்494

             35
வாய்ந்த நன்றிம றப்பது தீதென
வாய்ந்த தன்மைய ராவழி யாதுபின்
வேய்ந்த தம்மகர்க் காண்டகை
                     மேவிமுன்
னீய்ந்த நன்றியி தென்றவர் சாற்றுவார்.
 
"வாய்ந்த நன்றி மறப்பது தீது என
ஆய்ந்த தன்மை, அரா அழியாது, பின்
வேய்ந்த தம் மகர்க்கு, 'ஆண்டகை
                          மேவி முன்
ஈய்ந்த நன்றி இது' என்று, அவர் சாற்றுவார்.

     "பின் அவ்யூதர், ஆண்டவனால் தமக்கு வாய்த்த அந் நன்றியை
மறப்பது தீதென்று ஆராய்ந்து கண்ட தன்மையால், அப்பாம்புருவத்தை
அழித்து விடாமல், தமக்குப் பின் வந்த தம் மக்களுக்கு அதனைக் காட்டி,
'ஆண்டவன் முன் நாளில் நமக்கு விரும்பித் தந்த நன்மையின்
அடையாளம் இது' என்று சொல்லுவர்.

            36
புரைத ருந்தட மீதெனப் புக்குநா
னிரைத ருங்கட னீதியி தென்றவர்
விரைத ரும்புகை யும்வெறி மாலையு
முரைத ரும்புக ழோடிட நாட்டினேன்.
 
"புரை தரும் தடம் ஈது எனப் புக்கு நான்,
'நிரை தரும் கடன் நீதி இது' என்று, அவர்
விரை தரும் புகையும் வெறி மாலையும்
உரை தரும் புகழோடு இட நாட்டினேன்.

     "பாவத்தை விளைவிக்கும் வழி இது என்று கண்டு நான் புகுந்து,
'முறைப்படி அமைகின்ற கடமையும் நீதியும் இது' என்று கூறி, அவர்
வாயால்உரைக்கும் புகழோடு நறுமணம் வீசும் புகையும் மணமாலையும்
அதற்கு இடும் வழக்கத்தை ஏற்படுத்தினேன்.